தமிழகத்தை மாற்ற வந்த தத்தாத்ரேயர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:25 | Best Blogger Tips

 



TRC member no 741

தமிழகத்தை மாற்ற வந்த தத்தாத்ரேயர்தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இப்பொழுது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கிறது காரணம் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் பிஜேபி சார்பாக போட்டியிடுகிறார்.

வாழ்த்துகள்



அண்ணாமலை ஐபிஎஸ்.

2011ல் ஐபிஎஸ் அதிகாரியாகி எட்டு வருடங்களிலே தன்னுடைய பதவியை துறக்க 

அண்ணாமலை அவர்களுக்கு எப்படி னது வந்தது? அப்படி என்ன அவருக்கு போலீஸ் வேலை மீது வெறுப்பு? கம்பீரமா காக்கி உடையை தியாகம் செய்து வி ட்டு ஏன் காவி அரசியல் மீது ஆசை கொ ண்டார்? இதற்கு விடை தேடவே இந்த பதிவு.


அசோகரின் மனம் மாறி மதம் மாற கலி ங்கப்போர் காரணமாக இருந்தது என்றால் அண்ணாமலை மனம் மாறி தன் மதம் 


தேட துணையாக இருந்தது கர்நாடகாவி ல் உள்ள சிக்மகளூர் மலைப்பகுதியில் உள்ள பாபா புதன்கிரியாகும்.


பாபா புதன் கிரியில் 2017 ம் ஆண்டு டிச ம்பர்மாதம் 3 ம் தேதி நிகழ்ந்த ஒரு மதப்போராட்டம் தான் அண்ணாமலை அவ ர்களுக்கு மனமாற்றத்தை அளித்து தன் மதம் சார்ந்த அரசியலை தேட வைத்தது

அதென்னப்பா...பாபா புதன்கிரி என்று கேட்கிறீர்களா..  ஒற்றை வார்த்தையில்

கூற வேண்டும் என்றால் பாபா புதன்கிரியை தென்னிந்திய அயோத்தி என்றே கூறுவார்கள்.இப்பொழுது தெற்கு கர்நாட காவில் பிஜேபி மிகப்பெரிய அளவில்

எழுச்சி பெற இந்த பாபாபுதன் கிரி தான்

காரணம்.


கி.பி 17 ம் நூற்றாண்டின் இறுதியில் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த பாபா புதன்

என்பவர் மெக்காவுக்கு போய் விட்டு ந்து தன்னை ஒரு ஞானியாக கூறி ஒரு

ஆசிரமத்தை அமைத்து அவருடைய சீடர் களுக்கு மத பாடங்களை கற்றுக்கொடு

த்து வாழ்ந்துவந்தார்.


என்னடா. இது பாபா புதன் ஆசிரமம் ஞானம் சீட ர்கள் என்று இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கூறுகிறானே என்று நி னைக்க வேண்டாம்.  சூஃபியிசம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தியாவில் இஸ்லாம் வாளால் வளர்ந்ததை விட யா ழால் அதாவது இசையினால் வளர்ந்தது தான் அதிகம்.

இந்து மத அடையாளங்களை உள் வா ங்கி இஸ்லாமிய வழிபாட்டை இசையின் மூலமாக எடுத்துச்சென்று இறைவனை

அடைய போதிக்கும் தத்துவமே சூஃபியி சம்.இந்த சூஃபியசம் தான் இந்தியாவில்

இஸ்லாம் வேகமாக பரவ துணை நின்றது.

பாபா புதன் ஒரு சூஃபி என்பதால் மெக்

காவுக்கு போய்விட்டு வந்த பிறகு சிக்மக ளூர் சந்திரகிரி மலை அடிவாரத்தில் ஒரு ஆசிரமம்அமைத்து இஸ்லாமிய மார்க்க த்தைஇசை வடிவில் தன்னுடைய சீடர்கள் மூலமாக கொண்டு செல்ல ஆரம்பித்தார்.

இந்த பாபா புதன் இருக்கிறார் அல்லவா

அவர் இந்திய வரலாற்றில் இன்னொரு

முக்கியமான விசயத்திற்காகவும் அறிய

ப்படுகிறார்.நாம் தினமும் குடிக்கிறோமே

காஃபி அதை இந்தியாவுக்கு கொண்டு

வந்ததே அந்த பாபா புதன் தான் என்கிறா ர்கள்.

எத்தியோப்பியாவில் இருந்து காஃபி அரபு தேசங்களில் தான் முதன் முதலில் புகுந்தது. காஃபியின் மெல்லிய போதையினால் கவரப்பட்ட அரபிகள் அதை கடவு ள் அளித்த பரிசு என்று கூறி காஃபி செடி

களையும் விதைகளையும் வேறு எங்கும்

கொண்டு செல்ல முடியாமல் தடை போட்டு வைத்து இருந்தார்கள்.


நம்ம பாபா புதனும் மெக்காவில் காஃபிக்கு அடிமையாகி விட்டார். ஊருக்கு போ கும் பொழுது தான் அடுத்த வேளை கா ஃபிக்கு என்ன செய்யலாம் என்று தாடியை தடவியபடியே யோசிக்க ஆஹா..

தாடி இதற்கு தானோ.என்று நினைத்து

ஏழு காஃபி விதைகளை தாடிக்குள் மறைத்து வைத்து கொண்டு ஊர் வந்து சேர்ந் தார்.

பாபா புதன் அந்த ஏழு காஃபி விதைக ளை சிக்மகளூர் சந்திர கிரி மலைப்ப குதியில் பயிரிட காஃபி விளைய ஆரம்பி த்தது.கூடவேஅந்த மலையும் பாபா புதன் கிரி என்றுபெயர் மாற ஆரம்பித்தது.பாபா புதன்மறைவுக்கு பிறகு அவருடைய சீட ர்கள்அவரை புதைத்த இடத்தில் ஒரு ர்க்காவை கட்டி மலையையே இஸ்லாமிய அடையாளமாக மாற்றி விட்டார்கள்.

சரிப்பா தென்னிந்திய அயோத்தி என்

றாயே..அதைப்பற்றி ஒன்றும் கூற வில்

லையே என்று கேட்கிறீர்களா..

.தத்தாரேயர் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்..சிவன் விஷ்ணு பிரம்மா என்று

மும்மூர்த்திகளும் உலக உயிர்கள் ஞா னம்பெற வேண்டி அத்ரி முனிவர் அனுசுயா தேவி மூலமாக ஒரு அவதாரத்தை உருவாக்கினார்கள்.அவர் பெயர் தான்

ஸ்ரீதத்தாத்ரேயர்.



வியாசரால் உலகின் ஞானகுரு என்றும் திரு மூர்த்தி என்று அழைக்கப்படும் த்தாத்ரேயரின் வாழ்க்கை முழுவதும் காடுகளில் தான் இருந்தது என்கிறது

இந்து புராணங்கள்.தத்தாரேயர் கர்நாடக வில் உள்ள சந்திரகிரி மலைப்பகுதியில் வாழ்ந்ததாக இந்துதொன்மவியல் கூறுகிறது.

இதனால் அங்கே தத்தாரேயர் ஞான பீடத்தை உரு வாக்கி இந்துக்கள் வழிப ட்டு வருகிறா ர்கள்

ஆக பாபா புதன் கிரிமலை இந்துக்கள்

மற்றும் முஸ்லிம்கள் வந்து வணங்கி

விட்டு செல்லும் ஒரு முக்கிய வழிபாட்டு

தலமாக மாறியதால் காலப் போக்கில் அயோத்தி ராமர் கோயில்பாபர் மசூதி மாதிரி இந்துக்கள் முஸ்லிம்கள் இடையே ஒரு பிரச்சினைக்குரிய பகுதியாகவே

இருந்து வருகிறது.

1975 க்கு முன்பு வரை ஸ்ரீ குரு தத்தாத்ரே யா பாபா புதான் சுவாமி தர்கா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து அவரவர் மத வழிபாடு படி பாபா புதன் கிரி மலையில் வழிபாடு நடத்தி இருக்கிறா ர்கள்.இந்த வழிபாட்டு தலமும் இந்து ஆல யங்களை வழிநடத்தி வரும் கர்நாடக அரசின் முஸ்ராய் துறையின் கீழ் இருந்து வந்தது

முஸ்ராய் துறை என்பது நம்முடைய ந்து அறநிலையத் துறை மாதிரி இந்து

கோயில்களை மட்டும் வழிநடத்தும் கர்

நாடக அரசின் துறை. இப்படி அரசின்

கட்டுப்பாட்டில் இருந்த பாபா புதன் கிரி

மலை வழிபாட்டு தலத்தை ஓட்டு அரசி யலுக்காக முஸ்லிம்களின் வக்ஃபு போ ர்டுக்கு 1975 ல் அளித்த பிறகு தான் பாபா புதன் கிரியில் மத ரீதியான பிரச்சினை

கள் உருவாக ஆரம்பித்தது ஏனெனில் அரசின் கட்டுப்பாட்டில் இரு ந்து பாபா புதன் கிரி வக்ஃபு போர்டு

கட்டுப்பாட்டில் வந்த பிறகு அங்கு இருந்த

தத்தாத்ரேயரின் பாதம் மற்றும் விளக்கை அப்புறப்படுத்த ஆரம்பிக்க இந்துக்கள் வரிந்து கட்டி போராட ஆரம்பித்தார்கள்

தத்தாத்ரேயர் அடையாளங்களை அழிக்க

நினைத்த வஃபு போர்டு செயலுக்கு சிக்மகளூர் மாவட்ட கோர்ட்டில் இந்துக்கள் வழக்கு தொடுக்க வழக்கின் தீர்ப்பில் தத்தாரேயர் பீடத்தில் இந்துக்களின் வழி

பாட்டு உரிமையை உறுதி செய்தது செசசன்ஸ் கோர்ட்.

இதை எதிர்த்து வக்ஃபு போர்டு கர்நாடக உயர்நீதிமன்றம் செல்ல அங்கும் இந்து க்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்

வக்ஃபு வாரியம் வழக்கு தாக்கல் செய்ய

வழக்கை வழக்கம்போல உச்சநீதிமன்றம்

விசாரித்து வந்தது.

அதாவது பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு

முன்பே உச்சநீதிமன்றத்தில் தொடரப்ப ட்ட வழக்கை நீண்ட வருடங்களாக விசா ரித்த உச்சநீதிமன்றம் கடைசியில் எங்களால் முடியவில்லை மாநில அரசே இது பற்றி முடிவெடுத்து கொள்ளலாம் என்று

கூறி விட்டது.


இதற்கிடையில் பாபா புதன் கிரியை முன்

வைத்து இந்து அமைப்புகள் போராட ஆர

ம்பிக்க சிக்மகளூர் மாவட்டத்தில் பிஜேபி

படு வேகமாக வளர ஆரம்பித்தது. பாபா

புதன்கிரி மலை உள்ள சிக்மகளூர் தொ குதியில் 2004 ல் இருந்து தொடர்ந்துமுறை பிஜேபி ஜெயித்து வருகிறது என்றால் தத்தாரேயர் அருள் யாருக்கு இருக்கிறது என்று பார்த்து கொள்ளுங்கள்.

நம்முடைய தமிழக பிஜேபியின் புதிய பொறுப்பாளராக வந்து இருக்கும் சி.டி.ரவி அவர்கள் தான் பாபா புதன் கிரி லையை உள்ளடக்கிய சிக்மகளூர் தொகுதியின் எம்எல்ஏ.தெற்கு கர்நாடகாவில் பிஜேபியை வளர்த்து வரும் எடியூரப்பா என்று இவரை கூறலாம்.


இந்த சி.டி ரவி தான் அண்ணாமலை

பிஎஸ் அவர்களை பிஜேபிக்கு அழைத்து

வந்தார். 2017 டிசம்பர் 3 ல் வந்த தத்தா ஜெயந்தி அன்று பாபா புதன் கிரி மலை யை மீட்க இந்து அமைப்புகள் ஆக்ரோச மாக களம் புக அதை எதிர் கொள்ள      

இஸ்லாமிய அமைப்புகளும் தயாராக அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருக்கு வந்த து தெரியுமா?

கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்படும்

அண்ணாமலைக்கு தான். சிக்மகளூர்

எஸ்பியாக இருந்த அண்ணாமலை திர

ண்டு நின்ற இந்து அமைப்புகளையும்

இஸ்லாமிய அமைப்புகளையும் தன்னு டைய சாமர்த்தியமான அணுகுமுறையால் கட்டுப்படுத்தி பெருமளவில் நடை பெற இருந்த இந்து முஸ்லிம் கலவரத்தை தடுத்து நிறுத்தினார்.


ஆனால் 2017 டிசம்பர் 3 ல் நடைபெற்ற

தத்தா ஜெயந்தியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இந்து அமைப்பினர் பாபா புதன் கிரியில் உள்ள தர்க்காவை

சேதப்படுத்துவதை பார்த்த அண்ணாம

லை ஐபிஎஸ் அவர்கள் இந்து அமைப்பி

னர் மீது தடியடி நடத்த சிதறி ஓடிய அவர்களின் உடலில் இருந்து கொட்டிய உதிரம் பார்த்த அண்ணாமலை கலிங்கப்போர் முடிந்து கலங்கி நின்ற அசோகரின் மன

நிலைக்கு வந்து விட்டார்.

பச்சை பசேலென இருக்கும் பாபா புதன்

கிரி மலை போலீஸ் தடியடியினால் ந்துக்கள் உடலில் இருந்து சிந்திய ரத்தத்

தினால் காவியாக மாறியதை பார்த்த அண்ணாமலை மனதும் மாற துவங்கியது.இந்த நிலையில் போலீஸ் தாக்குதலு க்கு எதிராக இந்து அமைப்புகள் மிகப்பெ ரிய போராட்டத்திற்கு தயாராக அதை

தடுத்து நிறுத்த மாவட்ட எஸ்பி என்கிற முறையில் சி.டி ரவியை நோக்கி தேடி வந்

தார் அண்ணாமலை ஐபிஎஸ்.

அண்ணாமலையின் இந்த தேடல் தான் அவரின் அரசியல் பாதைக்கு வழி ஏற்படுத்தியது.சி.டி.ரவி பாபா புதன் கிரி மலையில் இந்துக்களுக்கு உள்ள உரிமையை

ஆதாரங்களுடன் விளக்கி கூற அதுவரை

கம்பீரமாக காக்கி உடையுடன் கடமையை செய்தோம் என்று நிமிர்ந்து நின்ற அண்ணாமலை இந்துக்களின் உரிமை போராட்டம் இது என்று தெளிய ஆரம்பி த்தார்.

அரசுக்கு அடி பணிந்து கடமையை செய் வதை விட மனதுக்கு அடி பணிந்து பணி செய்வதே சிறந்தது என்று உணர்ந்து சி.டி ரவியை அடிக்கடி தேட ஆரம்பித்தார்

ரவியும் அண்ணாமலை அவர்களின் அறிவும் ஆற்றலும் பிஜேபிக்கு தேவை என்று வலியுறுத்த அண்ணாமலை பாதை மாற ஆரம்பித்தார்.

பாதை மாறி மனம் பயணிக்க ஆரம்பித்த பிறகு அண்ணாமலை க்கு காக்கி உடை மீது ஆர்வம் குறைந்து காவி அரசியல் மீது ஆர்வம் அதிகரிக்க போதும்டா போலீஸ் வேலை என்று தூக்கி எறிந்து விட்டு பொது வாழ்க்கைக்கு வர தயார் என்று

சி.டி ரவியிடம் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை ஒட்டி அறிவித்து விட்டார்.

தமிழக அரசியலில் பிஜேபியை வலுப்படு த்த சரியான ஆள் தேடி கிடைக்காமல் வெறுப்பில் இருந்த அமித்ஷாவிடம் தோ நீங்கள் தேடியவர் என்று அண்ணாமலையை அழைத்து செல்ல அமித்ஷாவே

அண்ணாமலையின் அறிவுத்திறன் கண் டு வியந்து நிஜமான அண்ணாமலையே நம்மிடம இருக்க இனி அண்ணாமலை பட ஹீரோ ரஜினியெல்லாம் எதற்குப்பா


என்று அண்ணாமலை அவர்களை தமிழ அரசியல் களத்தில் இறக்கி விட்டு விட்டார்.

அண்ணாமலையும் தமிழக அரசியலை

மிக சிறப்பாக மாற்றிக் கொண்டு இருக்கிறார் .அண்ணாமலையை தமிழக பிஜேபிக்கு அனுப்பிய அமித்ஷா அடுத்து

அவரை மனம் மாற்றிய சி.டி ரவியையும்

தமிழக பிஜேபிக்கு பொறுப்பாளராக அனுப்பி விட்டார்.

இதைத்தாங்க தத்தாரேயர் அருள் என்று கூற வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் கர்நாடகாவில் உள்ள தத்தாரேயர் பீடத்தில் சந்தித்து கொண்ட ஒரு போலீ ஸ் அதிகாரியும் அந்தப்பகுதி பிஜேபி ம்எல்ஏவும் இன்று தமிழக அரசியலை மாற்ற இணைந்து இங்கே இருக்கிறார்கள்.


தத்தாத்ரேயரை ஞான குரு என்று கூறுவார்கள்.அவர் உறைந்த மண்ணில் இருந்து ஞானம் பெற்ற அண்ணாமலை ஐபி எஸ் அவர்களும் தமிழகத்திற்கு ஞானம் போதிக்க வந்த தத்தாத்ரேயராகவே எனக்கு தெரிகிறார்.இந்த தத்தாத்ரேயர் அரவகுறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தை நிச்சயமாக மாற்றுவார்.

 


நன்றி இணையம்