பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:52 | Best Blogger Tips

 


பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத, கடும் பிரச்சினை என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலக நாடுகள் அனைத்துமே பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பின் மூலமே நிர்வாக செலவுகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. ஒரு ஆண்டின் வருவாய் - செலவு திட்டங்கள் வரி விதிப்பின் அடிப்படையிலேயே அமைகிறது.

ஆனால் கடந்த நிதியாண்டு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. கொரோனா தொற்று மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி எடுத்தது கண்கூடு. 2 மாதங்கள் முடங்கிப்போன மொத்த வாழ்க்கையே முடங்கிப்போன நிலையில், உற்பத்தி துறை உட்பட அணைத்து துறைகளும் பாதித்தன. பல தொழில்களும் முடங்கியதால் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியும் எதிர்பார்த்ததை விட குறைந்தது. ஆனாலும் மத்திய அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்தது.


இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான இலவச எரிவாயு திட்டத்தில் 12 ஆயிரத்து 825 கோடியே 98 லட்சத்து 86 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள, 8 கோடியே 1லட்சத்து 62 ஆயிரத்து 429 பேருக்கு இதுவரை இலவச இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பட்டியிலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 3 கோடியே 4 லட்சத்து 81 ஆயிரத்து 683 வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 32 லட்சத்து 42 ஆயிரத்து 217 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டியிலன மற்றும் பழங்குடியினருக்கு 11 லட்சத்து 83 ஆயிரத்து 360 இலவச இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்தில் 9211 கோடியே 30 லட்சத்து 13ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள 14 கோடியே 17 லட்சத்து 12 ஆயிரத்து 328 எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 402 கோடியே 41 லட்சத்து 44 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 61,90,992 இலவச உருளைகள் வழங்கப்பட்டன.



மேலும், 2.81 கோடி முதியோருக்கு 2815 கோடி ரூபாய் வழங்கப்பட்டதோடு, 80 கோடி மக்களுக்கு 8 மாதங்களுக்கு இலவச அரிசி, பருப்பு மற்றும் 20 கோடி மகளிருக்கு ஜன்தன் கணக்குகளில் மாதம் ரூபாய் 500/-, புலம் பெயர்ந்த தொழிலார்களுகளின் உணவு மற்றும் அவர்களின் ஊர்களுக்கு திரும்பி செல்ல ஒதுக்கப்பட்ட நிதி, திரும்பிய தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்


கூடுதலாக 40000 கோடி உட்பட ரூபாய் 1,75,000 கோடி கொரோனா காலகட்டத்தில் வழங்கப்பட்டது.


இவையெல்லாவற்றையும் விட, எதிர்பாராத கொரோனா தொற்றை சமாளிக்க உபகரணங்கள், மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ உதவிகள், ஆகியவற்றுக்கான பல லட்சக்கணக்கான கோடிகளை மத்திய அரசு செலவிட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார பாதிப்புகளினால் அரசுக்கு வருவாய் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பன்மடங்கு செலவானது குறித்து யாரும் வாய் திறக்க மறுப்பது ஏன்? வருவாய் இழப்பிருந்தாலும், கொரோனா தொற்றை சமாளிக்க செலவினங்களை எதிர்கொண்ட மத்திய அரசை பாராட்ட மனமில்லாமல், பெட்ரோல், டீசல் மீதான காலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றதே.



உலக நாடுகள் அனைத்துமே பெட்ரோல் டீசல் வரிவிதிப்பின் மூலம் தான் அதிக அளவு வருவாய் ஈட்டுகின்றன. ஆனால், மார்ச் மாதத்திலிருந்து நான்கைந்து மாதங்கள் பெட்ரோல் டீசல் பயன்பாடும் அதிகமில்லாதா நிலையில், வருவாய் இழப்பும் அதிகம். மேலும், கொரோனா காலகட்டத்தில் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டதால், இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெயை நம் நாடு உட்பட கப்பல்களில், வெளிநாடுகளில் சேமித்து வைத்தது. ஒரு வேளை, சேமிக்காது இருந்திருந்தால் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறியிருக்கவும் கூடும். நம் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாக திறமை மற்றும் திட்டமிடுதலினால், அப்படிப்பட்ட சூழ்நிலை தவிர்க்கப்பட்டது என்பதை அறிவது நலம்.


மேலும், தி மு அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பத்திரங்களின் மூலம் எண்ணெய் நிறுவனங்களிடம் கடன் பெற்ற காங்கிரஸ் அரசின் தவறான கொள்கை முடிவுகளினால், வருடம் தோறும் 10,000 கோடி ரூபாய் வட்டி செலுத்தி வருகிறது பாஜக அரசு. மேலும், இது வரை 5000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளது. மொத்தமாக 1லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வழங்கியுள்ளது காங்கிரஸ் அரசு. அடுத்த வருடம் மட்டுமே 25 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்த வேண்டும் மத்திய அரசு.


கொரோனா கால கட்டத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ,தேவையை செயற்கையாக உருவாக்க முயன்று உற்பத்தியினை குறைக்க முயற்சிக்கும் நேரத்தில், இந்திய அரசு சூழ்நிலையினை திறம்பட கையாண்டு அதிக கச்சா எண்ணெயை சேமித்ததன் காரணமாக தட்டுப்பாட்டை தவிர்த்து, பெட்ரோல் டீசல் விலை பன்மடங்கு அதிகரிக்காமல் தடுத்தது குறிப்பிடத்தக்கது.


80 விழுக்காடுக்கும் மேலாக இறக்குமதியை சார்ந்திருக்கும் நாம்,எண்ணெய் தயாரிக்கும் நாடுகளின் பிடியிலிருந்து விடுபடவேண்டுமானால், எண்ணெய் பொருளாதாரத்திலிருந்து, எரிவாயு பொருளாதாரத்திற்கு நாம் மாறவேண்டும். இந்த திசையை நோக்கியே நாம் பயணிக்கிறோம். தற்சார்பு பாரதம் இந்த துறையிலும் மிக விரைவில் எழுச்சி பெறும்.


வேறு சில நாடுகளில் உள்ள விலையோடு நம் நாட்டின் விலையை ஒப்பிடுகிறார்கள். வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் மட்டுமே. ஆனால், உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடு அதுவே. பால், அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவை விட ஐந்து அல்லது ஏழு மடங்கு அதிகம். வளராத நாடுகளோடு நம்மை ஒப்பிடுவதே தவறு. வளரும் நாடுகளில் ஹாங்காங் மற்றும் இங்கிலாந்தில் நம்மை விட பெட்ரோல் விலை அதிகம். சந்தை அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அவை பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகின்றன. கட்டமைப்புகளும், மக்கள் நலத்திட்டங்களும் தான் நாட்டின் பொருளாதாரத்தையும், தனிமனித வாழ்வாதாரத்தையும் சிறக்க வைக்கும், இவற்றை செயல்படுத்த வருவாய் தேவை. அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்குவதில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் தவிர்ப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளுக்கு பெருமை தரும்.

நன்றி நாராயணன் திருப்பதி,

செய்தி தொடர்பாளர்,

பாரதிய ஜனதா கட்சி.