#கிரிவல_மந்திரம்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:39 | Best Blogger Tips



#இங்கு_மலையே_ஈசன்....

#அக்னித்_தலமாக_விளங்கும்.... #திருவண்ணாமலையில்_கிரிவலம்

செல்ல செல்ல நமது பாவங்கள் பறந்தோடிவிடும்.

மிக மிக சக்திவாய்ந்த வழிபாடே கிரிவலம். சுமார் 14 கி.மீ சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் பல சூட்சுமங்கள் நிறைந்திருக்கிறது.பல சித்தர்கள் அங்கு வாசம் புரிகிறார்கள். கால் பாதம் தேய கிரிவலம் வர நமது கர்மவினைகள் குறைகிறது. வாழ்வில் இன்னல்களை அகற்றும் அற்புதமே திருவண்ணாமலை கிரிவலம்.அண்ணாமலை கிரிவலம் செல்லும் போது மனம் நிறைய வாய் நிறைய மந்திரஜபங்கள் ஜபித்து செல்வது பல யாக ஹோமங்கள் செய்த பலனைத் தரும்.

பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது.அதை விடவும் மிகவும் உயர்வானது,தேய்பிறை சிவராத்திரியில் செல்லும் கிரிவலம். இந்த நாட்கள் என்றில்லை எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்.காலையில்,மதிய நேரத்தில், மாலையில், இரவில், நள்ளிரவில்,பின்னிரவில், அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்.

அப்படி கிரிவலம் செல்லும் போது,மனதை சிதற விடாமல்,மந்திரங்களை ஜபித்து செல்ல முழு பலனும் கிட்டும்.

முதல் முறை கிரிவலம் செல்லும் போது:

அகத்திய மகரிஷி நமக்கு குருவானவர். எனவே குருவை வணங்கி அருணாச்சலம் தொழுவோம்.

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆதிகவசம் சிவகவசம்

சிவன் பிறந்த பரம கவசம்

ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா

இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்.ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது.இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்.இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்.

மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்

மந்திரங்களுக்கும் சாபங்கள் உண்டு.கலியுகத்தில் தவறான மனிதர்கள் மந்திரங்களை பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார். இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்.

நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;

நமச்சிவாய

நமசிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷியின் வாக்கு.

ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாசல சிவ

அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று.இதை கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்

ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆம் ஹெளம் செள

அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது

சிவையை நம

அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது.

எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ரீங் சிவசிவ

சைவ காயத்ரி மந்திரம் இது

ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய நம

நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா மந்திரம் இது.

பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம். இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை கிட்டும்

பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவசிவ

12 மனிதப் பிறவிகள் எடுத்து உணரக்கூடிய மகத்துவம் மிகுந்த மந்திரம் இது.

பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய சிவாய

கர்மவினைகளை எரித்துவிடும் சக்தி இந்த மந்திரத்துக்கு உண்டு.

பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவாய நம ஓம்

சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது

பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவயசிவ

சிவபெருமான் புகழ் மணக்கும் மந்திரம்.

பதினைந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

#அருணாசலாய_சிவ_நமஹ

16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது இந்த மகா மந்திரம் ஜபித்து வர அருணாச்சலேஸ்வரரே நமக்கு மந்திர உபதேசம் செய்வார் என்பது நம்பிக்கை.

அருணாசல சிவ அருணாசல சிவ

அருணாசல சிவ

அருணாசலா.......

 

 நன்றி இணையம்