பிரதமர் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:10 | Best Blogger Tips

 


பிரதமர் இன்று மாலை 6மணிக்கு நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

=====================================

கொரானா பொதுமுடக்கம் முடிவுக்கு வந்துள்ளதே தவிர கொரானா வைரஸ் பரவுதல் முடிவுக்கு வரவில்லை

உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியா கொரானா பரவுகின்றதை தடுப்பதிலும்

கொரானா தொற்று ஏற்ப்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் அதித அக்கறையோடு முன்னேற்பாடுகளுடன் இந்தியா மக்களை பாதுகாத்து வருகிறது

நாட்டில் 90 லட்சம் படுக்கையறை கொரானா வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

நாடுமுழுவதும் 2000 ஆய்வு மையங்களில் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை செய்து வருகிறது



அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராகி வருகிறது

கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக்கூடியது.

ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

பாதுகாத்து கொள்ள முக கவசம் இல்லாமல் காரியங்களில் ஈடுபட இது சரியான காலகட்டம் கிடையாது

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நமக்காக பாடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் விழாக்காலம் நெருங்குவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விடக்கூடாது எனவும் கூறினார்.

தற்போது கொரானா பரவுதல் கட்டுக்குள் இருந்தாலும்

இன்னும் பலர் அலட்சியமாக முக கவசம் போடாமல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக புகார் வருகிறது



நாம் பொருளாதார முடக்கத்தில் மீள வேண்டும் அதனால் பொது முடக்கம் தளர்த்தப்பட்டது

இந்த நேரத்துல அலட்சியமாக முக கவசம் போடாமல் கை கழுவுறதை பின்பற்றாமல் சமூக இடைவெளி இல்லாமலே சுற்றுவட்டாரத்தில் வளம் வருவதால் கொரானா பரவும் அச்சம் ஏற்றப்படுகிறது

இப்படிப்பட்ட நபர்களால் பாதுகாப்பாக இருக்கும் மற்றவர்களுக்கும் கொரானா பரவும் அபாயமான நிலை உருவாகிறது

தற்போது பண்டிகை காலம் துவங்குகிறது

இந்த நேரத்துல மக்கள் நெருக்கமாக இருக்கும் நிலையை தவிர்க்க வேண்டும்

அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்

அனைவரும் அடிக்கடி தங்கள் கைகளை கழுவ வேண்டும்

இதை சரியாக பின்பற்றி கொரானாவை வீழ்த்தி பொருளாதாரத்தை வெல்வோம்

ஜெய்ஹிந்த்



பாரத பிரதமர் மோடி

நன்றி 

சிவ.பரமசிவம்

மாவட்ட தலைவர்

பாஜக கல்வியாளர்கள் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம்