*பிரதோசக் கால வழிபாடு*

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips
Image result for பிரதோஷம்

 *இன்று பிரதோசம் சிவ..பக்தவச்சலம் ஐயா அவர்கள் வெளியிட்டிருக்கின்ற *"பிரதோச கால வழிபாட்டு பாடல்கள்"* என்கின்ற நூலிலிருந்து வெளியிடப்படுகின்றது.

  *(1)பிரதோஷம் என்றால் என்ன?*

சிவபெருமானுக்குரிய வழிபாட்டுக் காலங்களில் பிரதோஷம் காலமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். *"பிரதோசம்"* என்பது ஆன்மாக்களின் முற்பிறப்புக் குற்றங்களை நீக்குவதாகும்.
Image result for பிரதோஷம்
 பிரதோசம்

காலம் சூரியனின் மறைதலோடு துவங்குகிறது. மனம் ஈசுவரனிடத்தில்

ஒடுங்குவதற்கு இதுவே உகந்த காலமாகும்.

  *பிரதோசம் காலம் https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t75/1/16/1f618.png:*

பிரதி மாதம் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் திரயோதசி திதியின் பிற்பகல் 4.30 மணி முதல் 7.00 மணிவரை உள்ள காலமே பிரதோசக் காலம் எனப்படும்.
(
எனவே மேற்கண்ட காலத்தைப் பிரதோச காலம் எண்ணி வழிபாடு செய்ய வேண்டும்.

  *பிரதோச வரலாறு https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t75/1/16/1f618.png:*

மரணமில்லாப் பெருவாழ்வைத் தரும் அமிர்தத்தைப் பெறுதல் வேண்டித் தேவர்களும் அசுரர்களும் மந்தர
மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்

வருத்தமடைந்த வாசுகி விசத்தை உமிழ்ந்தது. இந்த நஞ்சு யுகத்திற்கே முடிவைத் தருவதுபோல எரித்துத் துன்புறுத்தியது. தேவர்கள் யாவரும் ஓடினார்கள். அனைவரும்
கயிலையம்பதியை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.

 கருணையே உருவமான கண்ணுதற் கடவுள் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விடத்தைக் கொண்டு வரச் செய்தார். அக்கொடிய நஞ்சினை அமரர்கள் உய்யும் பொருட்டு உட்கொண்டு கண்டத்தில்
நிறுத்திக் கொண்டார்.

 இதனை திருஞானசம்பந்தப் பெருமான்,
*"
பரவிவானவர் தானவர் பலருங் கலங்கிட வந்தகார்விடம்..*

*
வெருவ வுண்டுகந்த அருள் என்கொல்?..* *விண்ணவனே*
*
கரவின் மாமணி பொன் கொழித்திழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர்..*

*
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே"*.

என்று இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் பாடிப் பரவுவதைக் காணலாம்.

 பரம்பொருளின் அனுமதியுடன் மீண்டும் அமரர்களும் அசுரர்களும்

பாற்கடலை கடைந்து சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ந்தார்கள்.

அமிர்தம் உண்ட அமரர்கள் வேண்ட, ஆருயிர்த்திரள் துன்பம் நீங்கி இன்பம் அடையவும், சிவபெருமான் கையில் தமருகம் ஏந்தி இட
தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உமாதேவியார் காண திருநடனம் செய்தருளினார்.. இதுவே *'பிரதோஷ காலம்'* எனப்படும். அந்த நாள் திரயோதசி திதி மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரையாகும்.

  *விரதம் அனுட்டிக்கும் முறை https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t75/1/16/1f618.png:* பிரதோசக் காலத்தில், விடையின்

மீது மதிசூடிய மகேசுவரனை உமா தேவியுடன் வழிபடுவோர் ஆயிரம்

அசுவமேத யாகங்களைச் செய்த பலனை பெறுவார்.

 வளர்பிறை, தேய்பிறை ஆகிய இருபட்சங்களிலும் வரும் திரயோதசி

திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, அவரவர்கட்குரிய அனுட்டானங்களை முடித்து, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். (அன்று உபவாசமிருக்கலாம்) அன்று முழுவதும் தேவாரம். திருவாசகம் முதலிய அருள் நூல்களை ஓதுதல் வேண்டும். அன்று மாலை 4.30 மணிக்குச் சிவாலயம் சென்று இயன்ற அளவு அபிசேகம், அர்ச்சனை செய்வித்து

திருஐந்தெழுத்தினை (சிவாய நம) உள்ளம் உருகி ஓதுதல் வேண்டும்.

 நெய் விளக்கு ஏற்றுதல், தான தருமங்கள் செய்தல் முதலியன

அளவிலாப் புண்ணியம் தரும். பிரதோசக் காலத்தில் இறைவனை

இடபதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே கண்டு வணங்குதல் முறையுமாகும். பிரதோசக் காலம் கழிந்த பின் உணவு அருந்தித் துயிலலாம்.

 சிவபெருமான் தேவர்கட்குத் திருநடனத் தரிசனம் கொடுத்த நாள் சனிக்கிழமையாகும். எனவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிக
மேலானது ஆகும்.

  *பிரதோஷம் கால வழிபாட்டு பயன் https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t75/1/16/1f618.png:* *பிரதோசக் கால வழிபாட்டினால் செல்வம் வளரும். நோய்கள் அகலும்.* *கல்வியில் மேன்மை அடைவார்கள். கடன், மனக்கவலை, வறுமை, மரண வேதனை முதலியன நீங்கும்*.

*
ஒரு பிரதோச வழிபாட்டில் 1000 நாட்கள் சிவபூசை செய்த பலன் பெறலாம்.* *இக்காலத்தில் சிவ ஆலயம் ஐந்து முறை வலம் வந்து அளவிலாத பேறு பெறலாம்.* ❦❧❦❧❦❧❦❧❦❧❦❦❧❦
* சிவ சிவ *
*
சிவாயநம*

நன்றி இணையம்