வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
Image result for வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம்Image result for வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம்
பிரதோஷங்கள் வாரத்தின் அனைத்து கிழமைகளிலும் வருகின்றன. அப்படி வியாழக்கிழமை அன்று வரும் வியாழப்பிரதோஷத்தின் சிறப்பை இங்கு தெரிந்து கொள்வோம்.
☘️
மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்தபிரதோஷ நேரம்மற்றும் அது வரக்கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைகளில் வருகிறதோ அந்த கிழமைகளுக்குரிய நவகிரக நாயகர்களின் அருளும் அன்றைய தினத்தில் நமக்கு கிடைக்கிறது.
Image result for வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம்☘️
வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம்வியாழப்பிரதோஷம்என பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்குவதால் நவகிரகங்களில் முழு சுபகிரகமானகுரு பகவானின்அருளையும் சேர்த்து நமக்கு பெற்று தருகிறது.
☘️
வியாழன் பிரதோஷங்கள் வருகிற போது ஜாதகத்தில் குரு பகவானின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதிகளில், மஞ்சள் நிற பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக்கடலைகளை நிவேதித்து வணங்க வேண்டும். பின்பு நந்தி பகவான் சிவபெருமான் அம்மன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியவர்களை வணங்க பொருளாதார பிரச்சனைகள், திருமண தடை, புத்திர பேறு இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்க சிவ பெருமான் மற்றும் குரு பகவான் அருள் புரிவர்.

நன்றி இணையம்