இனி இந்திய பாடதிட்டத்தில்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:32 PM | Best Blogger Tips


இனி இந்திய பாடதிட்டத்தில் இந்தியர்களின் வரலாறு மட்டுமே இருக்கும்; பிரதமர் மோடி அதிரடி.!

மத்தியில் பாஜக அரசு கடந்த 2014 – ம் ஆண்டு பொறுப்பேற்றபோது பிரதமர் மோடி அவர்கள் சில வாக்குறுதிகளை அளித்திருந்தார், அதன்படி இந்த 5 ஆண்டுகள் முந்தைய அரசில் ஏற்பட்ட சில பாதிப்புகளை சரி செய்யவும் வெளியுறவு கொள்கை, உள்நாட்டு உற்பத்தி முதலானவற்றில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கும் என்றும்.,

அடுத்த 5 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், இந்தியாவின் மீதான வெளிநாடுகளின் பார்வை மாற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார், அதன்படி 2019-ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியான மாற்றங்களை நிறைவேற்றி வருகிறது.

அதன்படி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ராமர் கோவில் கட்டுவது என்று தனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் மோடி மற்றொரு மிக முக்கிய மாற்றத்தை செய்ய இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது, அதாவது இந்திய பள்ளி கல்லூரிகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் பற்றிய பாடங்களை நீக்கிவிட்டு அந்த காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய இந்திய நாட்டை சேர்ந்த மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அந்தெந்த மாநிலத்தை மொழியை சேர்ந்த மன்னர்களின் பாடங்களை கொண்டு வர முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்டை நாடான சீனாவில் பள்ளி பாடங்களில் அந்த நாட்டை சேர்ந்த மன்னர்கள், அவர்களின் வெற்றிகள் பற்றியே குறிப்பிடப்படுகின்றன இதனால் மனரீதியாகவும் அவர்கள் வலிமையானவர் என்ற எண்ணம் உருவாவதாகவும், இயல்பாகவே நாட்டு பற்று அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வரும் காலத்தில் இந்தியாவில் பிரிவினையை முற்றிலும் ஒழிக்க இந்தியாவின் உண்மையான வரலாற்றை பாட திட்டங்களில் சேர்க்கவும், முகலாய மன்னர்கள், வெள்ளையர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இந்திய மன்னர்களின் வரலாற்றினை வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ளவும் மாற்றங்கள் உண்டாக்கவும் மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பல தமிழ் மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் இனி தேசிய தலைவர்களாக அடையாளப்படுத்த படுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இனி இந்தியாவில் இந்தியர்களின் வரலாறு மட்டுமே இருக்கும்.

தகவல் TN NEWS24.