"உடம்பில்
எவனுக்கு ஐரோப்பியனின் ரத்தம் ஓடாதோ? அவர்கள் அனைவரும் ஒன்று சேருங்கள்" என்று
தென்னிந்தியாவின் சுதந்திர வேள்வியின் அறைகூவலான ஜம்புத்தீவு பிரகடனத்தை சின்னமருது 1801 ஜுன் மாதம் ஸ்ரீரங்கத்தில் வெளியிட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக 1801 மே மாதம் தொடங்கி 150 நாள் கடும் போர் நடந்தது மருது பாண்டியருக்கு எதிராக.ஆங்கிலேயருடன் உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருந்தது.
மருது சகோதர்கள் சரணடையவில்லை என்றால் காளையார்கோவிலை பீரங்கி வைத்து பிளந்துவிடுவோம் என்ற ஆங்கிலேயரின் எச்சரிக்கைக்கு பிறகு தங்கள் உயிரை விட இறைவனின் வீடே பெரிது என்றெண்ணி சரணடைந்து வீரமரணம் அடைந்த தினம் அக்டோபர் 24.
மொத்தமாக மருதுபாண்டியரின் நெருக்கமான வீரர்கள்,உறவினர்கள் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடல்களை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டனர் ஆங்கிலேயர்.. தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் சொருகி பார்வைக்கு வைத்தார்கள்.இனி ஒருவனுக்கு கூட தங்களை எதிர்க்கும் தைரியம் வரக்கூடாது என்று செய்த கொடுஞ்செயல்.
சின்ன மருதுவை தனிப்பட்ட முறையில் இரும்புக் கூண்டு ஒன்றை தயாரித்து அதில் திருப்பத்தூர் அழைத்து வந்து அந்த கூண்டோடு தூக்கிலிட்டான் ஆங்கிலேய மேஜர் அக்னியூ.
பின்பு சின்ன மருதுவின் மகன் துரைசாமி மலேசியாவில் உள்ள பினாங்கு(“தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்”) தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.அப்போது அவருக்கு வயது 15..தன் குடும்பம்,உறவினர்,படை எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஆற்ற முடியாத துன்பத்துடன் பிப்ரவரி 11-ல் அகதி போல நாடு கடத்துவதற்கு தூத்துக்குடி வழியே விலங்குடன் கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டார்.
27-10-1801 அன்று தூக்கிலிடப்பட்ட மருது பாண்டியர்களின் உடல்கள் காளையார் கோயிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்கள் விருப்பப்பட்டபடியே கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரமாயிரம் வீரர்களின் தியாகத்தின் மேல் நாம் நிற்கிறோம்.இந்த பண்பாடு மருதிருவர் போன்றவர்களின் ரத்த சகதிகளின் மேல் எழுந்திருக்கிறது இந்த நிலமாக.அந்த பயபக்தியும்,வீர உணர்வும்,நன்றியறிதலும் நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.-நாம் இந்து.
மருதுபாண்டியர்