காந்தியின் அதிகாரத்தை எதிர்த்து

மணக்கால் அய்யம்பேட்டை | 3:40 PM | Best Blogger Tips
Image may contain: 1 person, close-up


காந்தியின் அதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் வென்றவர்கள் மூன்று பேர்.
1) சுபாஷ் சந்திரபோஸ்
2) காமராஜ் K. நாடார்
3) வல்லபாய் பட்டேல்
இதில் போஸ் அவர்களுக்கும், காமராஜ் அவர்களுக்கும் அவர்தம் மாநிலத்தில் அபரிதமான செல்வாக்கு இருந்தது காங்கிரஸ் கட்சிக்குள்.
வல்லபாய் பட்டேல் விவகாரத்தில் காந்தியும் குஜராத்தி, பட்டேலும் குஜராத்தி. பாம்பின் கால் பாம்பறிந்த கதை. வல்லபாயை காந்தி மீற முடியாது, காந்தியை வல்லபாய் மீற முடியாது.
சுதந்திரம் அடைவதற்கு முன் 1946ல் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்த 15 மாகாணங்களில் 12 பட்டேலுக்கு ஆதரவு. மிச்ச 3ம் முடிவு எதுவும் எடுக்க வில்லை. நேருக்கு ஆதரவாக ஒரு ஓட்டும் இல்லை. ஆக அடுத்த பிரதமர் வல்லபாய் பட்டேல் என்பது உறுதியானது.
நேருவோ தனக்கு பிரதமர் பதவி கிட்டவில்லையெனில் காங்கிரஸை உடைக்க இருந்தார். காந்தி பேச்சை கேட்பதாக இல்லை. முடிவில் காந்தி வெற்றி பெற்ற பட்டேலை விலகச் சொல்லி ஒரு ஓட்டும் பெறாத நேருவை தலைவராக்கினார் தன் வீட்டோ பவரை பயன்படுத்தி. நேரு வெளிநாட்டில் படித்த மார்டன் மனிதர், தேசத்தை அமெரிக்கா போல் வழிநடத்துவார் என தப்புக் கணக்கிட்டார் காந்தி.
இதில் காந்திக்கு உதவியவர்கள் இருவர். 1) தன் சம்பந்தி ராஜாஜி, 2) மவுலானா ஆசாத்.
ராஜாஜி இந்தியாவின் முதல் ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்தவர் பட்டேல் என்ற முறையில் ராஜாஜிக்கு கோபம், பழிவாங்கினார் பட்டேலின் பிரதமர் பதவியை.
கடைசி காங்கிரஸ் தலைவராக இருந்த மவுலானா ஆசாத்தோ நேரு தான் தம் இன முஸ்லீம்களைக் காப்பார், பட்டேல் எதிர்ப்பார் என நினைத்திருந்தார்.
ஆனால் ராஜாஜியும், மவுலானா ஆசாத்தும் தம் இறுதிக்கால குறிப்புகளில் பாரத தேசம் இந்த முட்டாள் நேரு கையில் துண்டு துண்டாக நாசமாக தாம் காரணமாக அமைந்து விட்டதாகவும், பட்டேல் காங்கிரஸ் தலைவராக இருந்திருந்தால் அன்றைய தேசப்பிரிவினையை மிகத் திறமையாக தவிர்த்திருப்பார் மற்றும் பிரதமரான பின் எதிரி என முன்னமே கணித்து சீனாவிடம் ஏமாறாமல் போரைத் தவிர்த்திருப்பார் என்றும் தம் தவறுகளுக்காக கண்ணீர் வடித்துள்ளனர்.
அவர்கள் சொன்னது உண்மை தான். சீனாவை நம்ப வேண்டாம், அது நம்மைத் தாக்க இருக்கிறது என 1950ன் இறுதியிலேயே பட்டேல் அன்றைய பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதம் குப்பைத் தொட்டிக்குப் போனது அலட்சிய நேருவால்.
அதற்கு அடுத்த நாளே சீன ஆதரவு சோவியத் கம்யூனிஸ்ட் கயவர்களால் ஸ்லோபாய்ஸன் கொடுக்கப்பட்டு இரண்டே வாரங்களில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சர்தார் வல்லபாய் பட்டேல். சுபாஷ் சந்திரபோஸ் மரணத்தின் மர்மத்திற்கும், லால்பகதூர் சாஸ்திரி மர்ம மரணத்திற்கும் அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் கயவர்களே காரணம். ராஜீவுடன் சோனியாவைக் கோர்த்து விட்டதும் அந்த சோவியத் ரஷ்யா கம்யூனிஸ்ட் கயவர்களே. இந்தியா அழிய வேண்டும், கம்யூனிஸ்ட் சீனா வாழ வேண்டும் என கூட இருந்தே குழிபறித்தது ரஷ்யா.
இன்று அந்த பெருமகனார் பட்டேலின் நினைவு தினம். போற்றுவோம் அப்பெருமகனாரை.
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க, வாழ்க. 🙏
ஜெய் ஹிந்த்.
~ ஜெய்ஜி

நன்றி இணையம்

வாலிபத்தை மீட்டெடுப்போம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:53 PM | Best Blogger Tips
Image result for வாழ்க்கை என்பது ஒரு வட்டம்


கோழி பருந்திடமிருந்து குஞ்சுகளை காப்பாற்ற அரவணைத்து செல்வதை பார்த்திருக்கீங்களா?? இதை Biologically driven instinct to protect என்று சொல்கிறார்கள். அதே கோழி சிறிது காலம் சென்ற பின், ஓரளவு வளர்ந்த குஞ்சுகளை தன் பக்கத்துலயே விடாது, தலையில் கொத்தி துரத்தி விடும். இதை Biologically driven instinct to seperation என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதன் குழந்தை வளர்ப்பில் இந்த நிலைகளை எப்படி கையாள்கிறான்???

45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன்னோட 16 வயது மகனை அழைச்சுட்டு வந்தார். "இவனை பார்த்தாலே ஆத்திரமா வருது சார். தோளுக்கு மேல வளர்ந்துட்டான் அடிக்கவும் முடியல. ஒரு சொன்ன பேச்சும் கேக்க மாட்றான். எதுக்கு எடுத்தாலும் எதிர்த்து பேசறான். எப்பவும் சோர்வா இருக்கான், எதையும் மெதுவா செய்றான், இராத்திரி தூங்குறதே இல்லை.. எப்போ பார் வீடியோ கேம்ஸ். கொஞ்சம் இவனுக்கு புத்திமதி சொல்லி கவுன்சலிங் கொடுத்து என் பேச்சை கேக்க சொல்லுங்க சார்ன்னு சொல்றார்...
 Image result for வாழ்க்கை என்பது ஒரு வட்டம்
அவங்க பிரச்சனை என்னன்னு நல்லா தெரிஞ்சது. அப்பா, Biologically driven instinct to protect' இருக்கார். பையன், Biologically driven instinct to seperation' இருக்கான். சுருக்கமா சொன்னால், "ஒரே உறையில இரண்டு கத்தி".

குழந்தை பிறப்புல உலகத்துலையே இராண்டாவது பெரிய நாட்டில் இருக்கோம். ஆனால் குழந்தை வளர்ப்பு நமக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கு இல்லியா??

ஒரு அழகான குழந்தையா நம்ம வீட்டில் சந்தோசத்தை அள்ளித் தெளிக்கும் ஒரு பையன் திடீரென்று ஒரு நாள் உங்களுக்கு மிகுந்த துன்பத்தை கொடுக்கும் நபராக மாறுவது எப்படி?? நீங்க சொன்னதெல்லாம் கேட்டுட்டு உங்க சேலைக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டிருந்த பையன், திடீர்ன்னு ஒரு நாள் கை, கால், முகமெல்லாம் முடிகளோட குபீர்ன்னு வளர்ந்து, குரல் உடைந்து உங்களை கலவரப்படுத்துவது எதனால்??

உங்களுக்கு நம்ப கஷ்டமாக இருந்தாலும், உங்களால ஏத்துக்க முடியல என்றாலும். உங்க பையன் வளர்ந்துட்டான். அவனுக்கான நண்பர்கள், உறவினர்கள்ன்னு அவனோட தனி உலகத்துக்கு செல்ல தயாராகிட்டான் என்பது தான் இது எல்லாத்துக்குமான பதில்.
Image result for வாழ்க்கை என்பது ஒரு வட்டம்
இந்த முரண்பாடுகள் ரொம்பவே இயற்கையானது, இயல்பானது. அவனுடைய மாற்றத்தை உலகறிய செய்வது தான் டீன்-ஏஜ் என்னும் வளர் இளம் பருவம்.
நேற்று வரைக்கும் அவன் குழந்தை தான். ஆனால் பையாலஜிக்கல்லி இனிமே அவன் குழந்தை இல்லை. அவனுக்குள்ள இருக்கிற இயற்கை தூண்டுதல் அவனை பிரிந்து போக சொல்லும். உங்களுக்குள்ள இது நாள் வரை இருந்த இயற்கை தூண்டுதல் அவனை மேலும் பாதுகாக்க சொல்லும். இது இரண்டுக்கும் நடக்கும் உரசல்கள் தான் நாம டீன் ஏஜ் பசங்களிடம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள்.

இதிலிருந்து எப்படி வெளி வருவது?

"என்னால என் பையனை புரிந்து கொள்ள முடியவில்லை, அவன் என் பேச்சை கேட்பதில்லை" என்று சொல்லும் பெற்றோர்களுக்கு Stephen Covey, தன்னுடைய "7 habits of highly effective people" புத்தகத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்

"உங்கள் பையன் பேசுவதை புரிந்து கொள்ள, நீங்கள் தானே அவன் பேச்சை கேட்க வேண்டும்??? மாற்றி சொல்கிறீர்களே. என்பது தான் அந்த கேள்வி. சரி தானே?? இது தான் முதல் நிலை. குழந்தைகளை பேச விட்டு கேளுங்கள்.

இரண்டாவது, உயிரியலை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மீறி செயல்படுவது தான் இயற்கை. மன வளர்ச்சி குன்றிய குழந்தை மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆரோக்கியமான ஒரு குழந்தை உங்களை மீறி தான் செயல்படும்.

மூன்றாவது, விளையாட்டுக்களில் இருந்து அவர்களை பிரிக்க நினைக்காதீர்கள். விளையாட்டு மூலமாக தான் அவர்கள் உலகை புரிந்து கொள்கிறார்கள். நீங்கள் அவர்கள் உலகை புரிந்து கொள்ள விரும்பினால், அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள்..!!! அது வீடியோ கேமாக இருந்தால்ம் சரி.

நான்காவது, அவன் எப்பொழுது உங்களிடம் பேச முயற்சித்தாலும் மகிழ்ச்சியாக கவனியுங்கள். ஒரு வேளை உங்களை கவனிக்காமல் அவன் செயல்பட்டால் அதற்காக திட்டவோ, சத்தம் போடவோ செய்யாதீர்கள். அவர்கள் உலகத்தில் இருக்க அனுமதியுங்கள்.

ஐந்தாவது, சோசியல் மீடியாக்களில் அவர்கள் ஈடுபட ஊக்குவியுங்காள். ஆனால் நெட் பயன்படுத்தும் போது அவர்கள் உடன் இருங்கள். அவர்கள் உங்களுக்கு தெரியாமல் ஒரு விசயத்தை கற்றுக் கொள்ளாமல் இருக்க, நீங்களும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் உங்கள் போன் / நெட் பயன்பாட்டை குறைத்து, அவர்களுக்கு முன் உதாரணமாக செயல்படுங்கள்.

ஆறாவது, அவர்கள் மன நலனில் அக்கறை செலுத்துங்கள், டீன்- ஏஜிற்கே உரிய சந்தேகங்கள், குழப்பங்கள் அவர்களை ஆக்ரமிக்கும். நீங்கள் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும். எல்லாவற்றிற்கும் பாஸிடிவ் பதில் கொடுங்கள். உற்சாகப்படுத்துங்கள்

கடைசியாக..., அவர்களை பார்த்து

பொறாமைப்படாதீர்கள்...??!! ஆம், ஒரு ஆய்வு, நாம் நம் குழந்தைகளின் இளமைக்காலத்தை பார்த்து நம் குழந்தை பருவத்தை ஒப்பிட்டு பொறாமை கொள்கிறோம் என சொல்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?? நம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது....!

நம் குழந்தைகளுடன் சேர்ந்து நாமும் நம் வாலிபத்தை மீட்டெடுப்போம். குழந்தைகளை புரிந்து கொள்ள அதுவே சிறந்த வழி....!!


நன்றி இணையம்