*ஜீவ சமாதி*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:13 PM | Best Blogger Tips


Image result for ஜீவ சமாதி
ஐவர் ஜீவசமாதி தரிசனம். !!!
திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)ஆலயம் கட்டியவர்கள்.

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்கள் மூவர் ஜீவசமாதி

1-மௌன சுவாமி
2-காசி சுவாமி
3-ஆறுமுக சுவாமி
வெளிப்பிரகாரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி
4-ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி
திருக்கோவில் ராஜகோபுரம் கட்டிய சித்தர்
5-ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி .

திருச்செந்தூர் ஆலயத்தை கட்டியவர்கள் இந்த ஐந்து சித்தர்கள் தான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்கள் கட்டிய நிலையில் பக்தர்களாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.

இந்த ஐந்து சித்தர்களின் ஜீவசமாதிகளையும் ஒரே நாளில் யாரும் வணங்கியவர்கள் உண்டா என தெரியவில்லை.

தரிசனம் செய்ய செல்லும் வழி

1-காசி சுவாமி, 2-மௌன சுவாமி ,
3-
ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.

4-ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

5- ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புரம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். 4வது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். 5 ஜீவசாமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும்.


நன்றி இணையம்