*அனைவரும்
பின்பற்ற வேண்டிய*
*நாகரிகங்கள் இவை:*
*நாகரிகங்கள் இவை:*
*பொது
இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.*
*நண்பர்கள்
/ உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்.*
*(இந்த
பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள்
படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.*
*கடனைத்
திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள். ஓயாமல் அதைப்பற்றி பேசி அவர்கள் மனதை புண்படுத்தி குளிர்காயாதீர்கள்.கடன் பட்டவர்கள் ஏற்கனவே கலங்கித்தான் போய் இருப்பார்கள்.*
*ஒருவர்
கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.*
*ஒருவரிடம்
பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார்.* *பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.*
*அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.*
*பொது
இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள்.*
*நீங்கள்
ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால்
கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.*
*சூப்பர்
மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !*
*ஒருவர்
உங்களுக்கு treat தரும்
போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.*
*ஒருவர்
வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள்
சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்*.
*நீங்கள்
guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்கு என்று இருக்கும் உரிமையை மீறி அந்த குடும்ப விசயங்களில் தலையிடாதீர்கள்.*
*முதல்
சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத்
தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.*
*நீங்கள்
சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான் இப்படி,என் ஸ்டேட்டஸ் எப்படி தெரியுமா,என் தகுதி இப்படி etc)*
*யாராக
இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.*
*வயது,
சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.*
*உங்களை
விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.*
*வீட்டில்
உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.*
*புதுமனைப்
புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.*
*உங்கள்
பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள்.*
*allow them freedom !*
*ஒருவர்
உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் செய்து கொடுத்தால் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .*
*பழைய
நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ
கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.*
*ஒருவருடைய
மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.*
*உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.*
*ஒருவரை
3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த
ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!).
அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.*
*பாடல்களை
எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.*
*ஒருவரின்
உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!.*
*Service
industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.*
*மற்றவரின்
taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!*
*ஒருவர்
போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.*
*என்
வாழ்க்கை எனக்கு தான், என் விருப்பம்தான் எனக்கு, மற்றவர்களுக்காக வாழமுடியாது என அடிக்கடி பேசாதீர்கள் இது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்படி நீங்க வாழனும் என நினைச்சால் நீங்க மட்டும் தனியா இருக்கனும். மற்றவர்களுக்காக கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் அது தான் உண்மையான இன்பம்.*
*படித்ததில் பிடித்தது.*
நன்றி இணையம்