பணிவும் துணிவும் இல்லாத வாழ்வு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:19 | Best Blogger Tips
Image result for பணிவும் துணிவும்

ஆற்றின் இரு கரைகளைப் போன்றது பணிவும் துணிவும். கரை இல்லாத ஆற்றுநீர் கால்வாய் வழியாகப் பாயாது. கழனிகளில் புகாது. நெல்மணிகள் விளையாது. இதேபோல பணிவும் துணிவும் இல்லாத வாழ்வு வெற்றிகரமாக அமையாது. இதற்கு உறுதுணையாக இருப்பது நாவடக்கம்.

எதைக் காக்காமல் இருந்தாலும் நாவை கட்டாயம் காத்துக் கொள்ள வேண்டும். நாவை அடக்காவிட்டால் வசைச் சொற்களை பேச வேண்டியிருக்கும். வாயை அடக்கி நாவை மடக்கிப் பணிவோடு பழகுபவர்களுக்குப் பாதகம் ஏற்படவே செய்யாது என்கிறார் சாலமன்

பணிவுக்கு நாவடக்கம் முன் வாசல் ஆகும். அந்த வாசலில் உள்ள படிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
அவசியம் ஏற்படும் பொழுது மட்டுமே வாயைத் திறக்க வேண்டும். சுருக்கமாகவும், சுவையாகவும் பேசுவது சிறப்பானது. கேட்பவரின் தன்மை அறிந்து நன்மை தரும் நல்ல சொற்களைத் தான் கூற வேண்டும். பேசும் சொற்களில் கோபக் காற்று வீசக் கூடாது. கடுஞ்சொல் கலக்கவே கூடாது. வசைமொழி எப்பொழுதுமே ஆகாது

இனிய சொற்கள் இருக்கும் பொழுது வன்மையான சொற்களை வாயாலும் உச்சரிக்காமல் இருப்பது நல்லது.
மென்மையாகவும் இனிமையாகவும் சிந்தித்துப் பேச வேண்டும். மணி அடிப்பது போல கணீர் என்று பேசுவது சிறப்பானது. அளவுக்கு மேல் பேசக்கூடாது. சொல்லில் சிக்கனம் அவசியம் தேவை. அளந்து பேசுவது இனிமையானது. பேச வேண்டிய இடத்தில் கட்டாயம் பேச வேண்டும். எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பது விரும்பத்தக்கது அல்ல.

கண்டபடி பேசிக்கொண்டு இருப்பதால் பலவிதமான இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வாய்க்கு வந்தபடி உளறக்கூடாது. நிதானித்துப் பேசுவது நல்லது. தானத்திலும் பெரிது நிதானம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம். கருத்தோடும், காரியத்தோடும் பேசுவது நன்மையைத் தரும். நாவினால் வெளியேறும் சொற்களும் நறுக்காய் இருக்க வேண்டும்.

சிக்கனமான பேச்சு என்றுமே சிறப்பைத் தரும்

👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி  👤✍ *பெ.சுகுமார்*