ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:57 | Best Blogger Tips
Image result for தென்குடி திட்டை

இந்த மாதிரி அரிய நல்ல அன்மீக தகவல்களை படிக்க கூட ஒரு தவம் செய்தால் மட்டுமே முடியும்....
மெய்சிலிர்க்கும் ஆன்மீகத் தகவல்கள்
Image result for தென்குடி திட்டை
அதிசயம் ஒன்று:

அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை வெள்ளமெனகொட்டியது. உயிரினங்கள் அழிந் தன. ஆனால், அவ்வளவு வெள்ளப்பெருக்கிலும், பூ லோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம் அங்கு இறையருள் இருந் தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை எனும் திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.
Image result for தென்குடி திட்டை
அதிசயம் இரண்டு:

பரம்பொருள் ஒன்றே. பலவல்ல! சத்தியம் ஒன்றே இரண்டல்ல!! என்பது வேதவாக்கு அப்பரம்பொருள் தன்னிலிருந்து ஒரு பகுதியை சக்தியைப் பிரித்து உமாதேவியைப் படைத்தார். திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விதான த்தில் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனைப் பிரார்த்திக்கும்போது அம்மன் அவர்கள்தோஷம் நீங்க அருளுகின்றார். பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடை, மாங்கல்யதோஷ ம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகை எனப்புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.

அதிசயம் மூன்று:

பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உமையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப்பரிபாலன ம் செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தனர். ஆனால் மாயைவயப்பட்டிருந்த மும் மூர்த்திகளும் பெரு வெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ் ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக் கண்டு பயந்தனர். அலைந்து திரிந்து பெருவெள்ளத்தின் நடுவில் பெருந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். மாயை நீங்க வேண்டி இறைவனைத்தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத் தைப்போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்துதோன்றிய மந்திர ஒலிகள் மும்மூர்த்திகளையும் அமைதியடைச் செய்தது.
பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறை வன் அவர்களுக்கு காட்சி தந்தார். மும்மூர்த்திகளின் மாயையை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய 3 தொழில்களையு ம் செய்ய உரிய சக்தியையும், ஞானத் தையும் அருளினார். மும்மூர்த்திக ளும் வழிபட்டு வரம்பெற்றது மூன்றாவது அதிசயம்.

அதிசயம் நான்கு:

மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்துகொண்டேவந்த சந்திரபகவான், திங்களூர் வந்து கைலாசநாதரை, வணங்கி தவம் இருந்தார். கைலாசநாதரும், சந்திரனின் சாபம்நீக்கி மூன்றாம் பிறையாக தன் சிரசில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்க ளூரில் தன் சாபம் தீர்த்த சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடனை செலுத்துகிறார். எப்படி என்றால் இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழி கைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யா பிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன்மீது ஒருசொட்டுநீர் விழுவதைஇன்றும் காணலாம். உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது. இந்த ஆலயத்தில் அமைந்துள்ள நான்காவது அதிசயம் இது.

அதிசயம் ஐந்து:

நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலய த்தின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குலகுரு வான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார். எனவே, இது பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்ச பூதங்களுக்கும் தனித் தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து லிங்கங்கள் அமைந் திருப்பது ஐந்தாவது அதிசயம்.

அதிசயம் ஆறு:

எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர் த்தியே பெரிதும் வழிப்பட ப்பட்டு வரம்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம். ஆனால் திட் டைத்தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய ஆறுபேரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழி படப்பட்டு தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். எனவே, பரிவார தேவதைகளைப்போல அல்லாமல் மூலவர்களைப்போலவே, அருள் பாலிப்பது
ஆறாவது அதிசயம்.

அதிசயம் ஏழு:

பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினால் உருவாக்கப் பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரிய வில்லை. எனவே இது ஏழாவது அதிசயம் என்றால் மிகையாகாது.

அதிசயம் எட்டு:

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்றும் தோஷம் நீங்கப் பெறவில்லை. இதனால் திட்டைக்கு வந்து வசி ஷ்டேஸ்வரரை ஒரு மாதம் வரை வழிபட்டு வந்தார். வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் தோஷம் இன்றுடன் முடிந்துவிட்டது.நீ திட்டைத் திருத்தலத்தின் காலபைரவனாக எழுந்தருளி அருள்புரியலாம் என்றார். அன்று முதல் இத்தலம் கால பைரவரின் ஷேத்திரமாக விளங்கி வருகிறது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேக ம் அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். இங்கு எழுந்தருளி உள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.

அதிசயம் ஒன்பது:

நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர். குருபகவான் ஒருவரே. உலகம் முழுவதும் உள்ள தன தான்ய, பணபொன் விஷயங்களுக்கு குருவேஅதிபதி. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இட ங்களை தன்பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களி னால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குருபகவான். எனவே, குருபார்க்க கோடி நன்மை என்ற பழ மொழி ஏற்பட்டது. இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக் கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவருக்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவு ம், அதனையொட்டி லட்ச்சார்ச்சனையும் குருபரி கார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இங்கு எழுந்தருளி உள்ள ராஜ குரு பகவான் ஒன்பதாவது அதிசயம்.

கன்னுக்கு தெரிந்தது ஒன்பது அதிசயமே கன்னுக்கு தெரியாத அதிசயம் இன்னும் எத்தனையோ இருக்கலாம் வாழ்வில் ஒரு முறையாவது தென்குடிதிட்டை ஆலயம் சென்று தரிசனம் செய்து கொண்டு வாருங்கள் 

திட்டையில் வழிபட்டால் தீங்குகள் ஒழியும்

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையேதஞ்சை அடுத்த திட்டையில் பிரசித்தி பெற்ற வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 15வது தலம். கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 78 வது தலம். புத்திகாரகர், தனகாரகர் என்று கருதப்படும் குரு, தங்கத்துக்கும், தனத்துக்கும் அதிபதி. பக்தர்களின் தோஷங்களை நீக்கி உலகியல் இன்பங்களை வழங்குபவர் என்பது ஐதீகம்.வசிஷ்ட முனிவர் தவம் புரிந்து வழிபட்டதால், திட்டை கோயில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பிரளய காலத்திலும் மூழ்காமல் இந்த இடம் திட்டாக (மேடு) இருந்ததால், ஊரின் பெயர் திட்டை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இறைவியின் பெயர் உலகநாயகி என்ற மங்களாம்பிகை. பெண்கள் துயர் தீர்ப்பதில் முதல்வி.

சிவனின் ஆலயமாக இருந்தாலும் இங்குள்ள சக்கர தீர்த்தம், மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தால் உருவாக்கப்பட்டது. இங்கு தேவர்கள் மரம், செடி, கொடிகளாகப் பிறந்து இறைவனை வழிபடுகின்றனர். ருத்ரன் ஆல மரமாகவும், விஷ்ணு அரசமரமாகவும், பிரம்மன் பூவரசு மரமாகவும் தோன்றியுள்ளனர் என்றும் தல புராணம் கூறுகிறது. ஆனால், வில்வ மரம்தான் தல விருட்சம். கொடி மரம் முதல் விமானக் கலசம் வரை அனைத்தும் கருங்கல்லால் ஆனவை. இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி, செல்வங்களால் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடலாம். திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் என்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

இக்கோயிலுக்கு வந்து வழிபடாத தெய்வங்களோ, தேவர்களோ இல்லை என்று கூறலாம். முழு முதல் கடவுள் விநாயகர் முதல் முருகன் வரை பல்வேறு தெய்வங்கள் வசிஷ்டேஸ்வரரைத் தொழுதுள்ளனர். தேவர்களில் இந்திரன் முதற்கொண்டு அஸ்வினி தேவர்கள் வரை வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். எமதர்மராஜா இங்கு வந்து சாபம் நீங்கப் பெற்றுள்ளார். நவகிரக நாயகன் சூரியன் இத்தலத்தில் வணங்கி கிரக நாயகனாக உயர்வு பெற்று, உலகைப் பிரகாசப்படுத்தும் சக்தியைப் பெற்றுள்ளார்.சந்திரனுக்கும் அவரது மாமனார் தட்ச பிரஜாபதியால் சாபம் வந்தது. சாபத்தால், அவர் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழிந்துகொண்டிருந்தார். திங்களூர் வந்து வழிபட்ட சந்திரனை சிவன் தலையில் சூடி அவர் சாபம் நீங்க உதவினார். அதற்கு நேர்த்திக்கடனை சந்திரன் திட்டையில் வந்து செலுத்தினார். சனி பகவானுக்கும் ஒரு சமயம் சாபம் வந்தது.

தன் சாபம் நீங்கவும், தனக்கு ஒரு அங்கீகாரம் வேண்டியும் சனி பகவான் திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி சாபம் நீக்கி நவக்கிரகங்களில் ஒருவராக அமர்த்தினார். அது முதல் சனிபகவான் இக்கோயிலில் மங்கள மூர்த்தியாக அனுக்கிரகம் செய்து வருகிறார். ராகு, கேது போன்ற நிழல் கிரகங்கள் ராஜாவாக விளங்கியும் பரந்தாமனின் பாம்புப்படுக்கையாகவும் விளங்கி வரும் ஆதிசேஷன் ஆயிரம் தலைகளையும், பூவுலகைத் தாங்கும் திறனையும் திட்டைக்கு வந்து வழிபட்டு பெற்றார் என்று தலவரலாறு கூறுகிறது. நவக்கிரகங்களில் சுப கிரகம் குருபகவான். சுவாமிக்கும், அம்பாளுக்கும் ,இடையில் தனி சன்னதியில், தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி திட்டையில் அருள்பாலிக்கிறார்.

குருப் பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பரிகார ஹோமம் ஆகியவை குரு பரிகாரத் தலமான இக்கோயிலில் நடக்கிறது. ஒருவருடைய ஜென்ம ராசியிலிருந்து 2,5,7,9,11 ஆகிய இடங்களில் குருபகவான் வரும் போது நற்பலன்கள் நடக்கும். ஜென்மராசியான 1ம் இடம் மற்றும் ஜென்மராசியில் இருந்து 3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சரிக்கும் போது நற்பலன்களைத்தர மாட்டார் என்பது பொது விதி. ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 3,6,8,12 ஆகிய இடங்களில் குருபகவான் இருந்தால் அவர்களுக்கு நன்மை என்பதே குருபகவானால் நடக்காது அவர்கள் நல்ல நிலைகளில் இருந்தாலும் அவர்களுக்கு அவச்சொல் (அதாவது கெட்ட பெயர் வந்து கொண்டேதான் இருக்கும்)அதற்க்கு நல்ல குருவை நாடுவதற்க்கு கூட நிறைய இடையூர்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.நல்ல குரு கிடைப்பது என்பதே அரிது இந்த மாதிரி நல்ல தகவல்களை படிக்க கூட ஒரு தவம் செய்தால் மட்டுமே முடியும். குருசாபம் இருந்தால் தங்க நகைகள் ஒன்று கூட மிஞ்சாது ஒன்று திருடு போய்விடும் இல்லை என்றால் அடகு கடைக்கு சென்று விடும்.

தென்குடி திட்டை

திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டது. ஓம் என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம். ஆதி காலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம் என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் ஹம் என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று.

மாணவர்கள் வழிபாடு

இத்தலத்தில் நின்ற நிலையில் தனி சன்னதியில் குருபகவான் ராஜகுருவாக இருக்கிறார்.இங்கே வந்து தன்னை வேண்டுவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை. குருபெயர்ச்சியால் ஜாதக ரீதியாக பாதிக்கப்படலாம் என கருதுவோர் மட்டுமின்றி, கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இங்கு வந்து குருபகவானை வழிபடுகின்றனர்.

போக்குவரத்து வசதிகள் எப்படி? : தஞ்சையிலிருந்து டவுண் பஸ்கள் நிறைய உண்டு. ஆட்டோ மற்றும் டாக்ஸி மூலமும் செல்லலாம்.அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (குருபகவான் பரிகாரதலம்). திட்டை - 613 003, தஞ்சாவூர் மாவட்டம்.
திட்டைக்கு வருக ! திடமான (கு)ருவருள் பெறுக ! குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
Image may contain: 1 person
நன்றி 
குருஜி ஸ்ரீகாலபைரவி ஜோதிட நிலையம் ஆத்தூர் மு.கிருஷ்ண மோகன் 8526223399