15/07/2018 ஞாயிறு காலை புதுச்சேரியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பி.ஆர்.டி. சி பேருந்தில் காரைக்கால் சென்றேன். சீர்காழிக்கு அடுத்து தரங்கம்பாடி மட்டுமே நிற்கும் என கூறிய நடத்துனர்.
திடீரென வண்டிய மெதுவாக இயக்கிபடி ஓட்டுநர் நிறுத்தினார். என்ன ஆயிற்று என நினைக்கும்போதே.
சீர்காழித்தாண்டி பூந்தாழை அருகே 80 வயது மதிக்கதக்க மூதாட்டிக்கு காலை உணவு மற்றும் குடிதண்ணீர் வழங்கினார். விசாரித்ததில் தங்களுக்கு ஓட்டல்காரர்களால் வழங்கப்படும் உணவை தாங்கள் எடுத்துக்கொள்ளாமல் அந்த மூதாட்டிக்கு கடந்த எட்டு மாதங்களாக தினமும் வழங்கி வருகிறார்கள்.
திரு நக்கீரன் எட்டு மாததிற்கு முன்புதான் இந்த வழிதடத்தில் நடத்துனராக பணிமாறுதல் பெற்றார்.
ஓட்டுநர் திரு மலையப்பெருமாள் மற்றும் திரு நக்கீரன் ஆகியோர் உதவி வருகின்றனர். அதுபோன்றே மாற்று நடத்துனர் மற்றும் ஓட்டுநரும் செய்துவருகிறார்கள்.
பாராட்டுக்களை நேரில் தெரிவித்தேன்.
பிடித்திருந்தால்.
நீங்களும் வாழ்த்தலாமே.
கர்மவீரர் காமராஜர் பிறந்ததினத்தில்
ஒரு மூதாட்டிக்கு சேவை செய்யும் பேருந்து ஊழியர்களை கண்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
கர்மவீரர் காமராஜர் பிறந்ததினத்தில்
ஒரு மூதாட்டிக்கு சேவை செய்யும் பேருந்து ஊழியர்களை கண்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
காணொளி திடிரென எடுத்தேன்.
நன்றி
கலிய. முருகன். வில்லியனூர். புதுச்சேரி