அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய உறவு !!
மண்ணில் குழந்தையாய் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி, மங்கையாய் வாழ்க்கையை ரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண், தாய் என்னும் அந்த உயர்ந்த நிலையை அடையும்போது தான் முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது அந்த இறைவனால் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும்.
மண்ணில் குழந்தையாய் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி, மங்கையாய் வாழ்க்கையை ரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண், தாய் என்னும் அந்த உயர்ந்த நிலையை அடையும்போது தான் முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது அந்த இறைவனால் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும்.
தாய் என்பவள் பத்து மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமந்து, அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய் தனது இரத்தத்தையே பாலாக்கி, பாலு}ட்டித் தாலாட்டுவாள்.
தொப்புள் கொடி அறுக்கப்பட்டாலும் தாய்க்குத் தனது குழந்தை மீது உள்ள அன்பும், அக்கறையும் குறையவே குறையாது. இரவு, பகல் பாராது தாய் தனது குழந்தையைக் கண்ணை இமை காப்பது போல வளர்ப்பாள்.
உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் அம்மா தான். அம்மாவை பிரிந்து இருப்பவர்களும், மகனை பிரிந்து வாழும் சு ழலில் உள்ள அம்மாவும் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.
ஐPடு - 2018 தொடர் சம்பந்தமான அனைத்து தகவல்கள் மற்றும் விவரங்கள் கொண்ட துல்லியமான தொகுப்பு. ஐPடு தொடரில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Nஐவுர்சுயு ஐPடு யுPPடுஐஊயுவுஐழுN
னுழறடெழயன செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்!
'அம்மா" எந்த சு ழலிலும் இதைத்தான் நினைப்பார் :
Nஐவுர்சுயு ஐPடு யுPPடுஐஊயுவுஐழுN
னுழறடெழயன செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்!
'அம்மா" எந்த சு ழலிலும் இதைத்தான் நினைப்பார் :
விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய். தாய்க்காக எதையும் இழக்கலாம்..! ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..!
கற்ற கல்வியை விட அப்பா, அம்மா உயர்ந்தவர்கள். அதனால்தான் இன்சியலை பெயருக்கு முன்னும், கற்ற கல்வியை கடைசியிலும் எழுதுகிறோம்..!!
தாய், தந்தையரின் அருமை நீ வளரும்போது தெரியாது, உன் பிள்ளையை நீ வளர்க்கும்போது தான் தெரியும். புரண்டுபடுத்தால் நாம் இறந்து விடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சு ரியன் 'அம்மா".
'ஹலோ" சொன்னதும் 'என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!
ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தால் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை, அவன் அதை உணரும்போது அவள் உயிரோடு இருப்பதில்லை..!
வார்த்தைகள் இல்லாமல் பேசவும், காற்று இல்லாமல் சுவாசிக்கவும், கவலைகள் இல்லாமல் வாழவும் ஒரு இடம் உண்டு என்றால் அது தாயின் கருவறை மட்டுமே.
அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை தேவையில்லை, அவள் சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் சாதம் போடட்டுமா என்று கேட்டாலே போதுமானதாகும்.
தாயே நமது முதல் தெய்வம். இதை அறிந்துதான் நமது மூத்த கவிஞர்கள் 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்று பாடியுள்ளனர். தாயின் வார்த்தைகளைக் கேட்டுப் பின்பற்றினால் நமது வாழ்வு வளம் பெறுவது உறுதி.
தாய் போல அன்பு கொள்ள,
தாயை தாண்டி உறவில்லை !
சொல்லில் அடங்கா தியாகம் தந்தவளே,
உன்னை சுமை என நான் நினைக்கவில்லை !!
✾✾ தாயை பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம்..!! ✾✾
தாயை தாண்டி உறவில்லை !
சொல்லில் அடங்கா தியாகம் தந்தவளே,
உன்னை சுமை என நான் நினைக்கவில்லை !!
✾✾ தாயை பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம்..!! ✾✾
தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்https://goo.gl/XOqGPp
நன்றி நித்ரா நாட்காட்டி