ஊழல் நிரவ் மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:44 | Best Blogger Tips


நிரவ் மோடி - பஞ்சாப் வங்கி மூலம் நடந்த ஊழல்???? இதற்கு என்ன சொல்ல போகிறார் மோடி???? சமிபகாலமாக கடன் வாங்கிய பெரும் முதலாளிகள் எல்லாம் பிஜேபி துணையுடன் ஓடுவதாக குற்றம்சாட்ட படுகிறதே???? அதற்கு உங்கள் பதில் என்ன மரிதாஸ்??? {கேள்வி: மதன், சுஜாதா ஸ்ரீ இன்னும் சிலர்}
இந்த நிரவ் மோடி விவகாரத்தை மிக எளிமையாக கூரவிரும்பிறேன்...
Buyer credit அப்டின்னு ஒன்னு இருக்கு. அதாவது நீங்கள் ஒரு இறக்குமதி செய்து வியாபாரம் செய்யக்கூடியவர் என்றால் - உங்கள் சொத்து மதிப்புக்கு ஏற்ப (அதில் சில கணக்கு உண்டு மிக எளிமையாக சொத்து மதிப்பு என்று கூறுகிறேன்.) அந்த இறக்குமதியாளர்களுக்கு Buyer credit அனுமதி கொடுக்கும் இங்கே உள்ள வங்கிகள். அதன் மூலம் என்ன செய்யலாம்???? 200கோடிக்கு இறக்குமதி செய போகிறேன் ஆனால் நான் பணம் கட்ட தேவை இல்லை. நீங்கள் கட்டவேண்டிய பணத்திற்கு வங்கிகள் பொறுப்பு என்று அந்த நாட்டில் உள்ள வங்கிகளிடம் இதன் மூலம் வாக்குறுதி அளிக்கப்படும்.
இது உங்கள் வியாபரத்தை விரைவு படுத்த உதவும் வேலை. ஆனால் இங்கே இந்த கேஸ் எப்படி இருக்கு என்றால் - அப்படி Buyer credit கொடுக்கும் போது செய்யவேண்டிய நடைமுறை எதுவுமே செய்யப்படவில்லை. இன்னும் சொல்வதானால் போலி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டி இந்த பெரும் தொகையை அவர் பயன்படுத்தியுள்ளார்.
இது புரிகிறதா????
நிரவ் மோடி தனது கடிதத்தில் கூறுகிறார் : கடன் கொடுத்த போது எல்லாம் தான் பஞ்சாப் நேசினால் வங்கிக்கு மட்டும் அல்லது அனைத்து வங்கிகளுக்கும் முறையாக arrangement fee கட்டியதாக கூறுகிறார். பிஜேபி அரசுடைய பிரச்சனை என்னவென்றால் நீங்க கட்டுவது இருக்கட்டும் - காங்கிரஸ் ஆட்சியில் அவங்க கொடுத்தது இருக்கட்டும். பிரச்சனை என்ன வென்றால் எந்த தகுதியின் பெயரில் இங்கே இந்த வங்கிகள் இவருக்கு Buyer credit அதுவும் high (A-) credit rating கொடுத்து ஒவ்வொரு வங்கியும் 500 கோடி முதல் 2000கோடி வரை கடன் கொடுத்தீர்????
இங்கே என் வீட்டோட மதிப்பு 1கோடி.. அந்த வீட்டுக்கு நீங்கள் 5கோடி Buyer credit கொடுத்தாலே தவறு... அதில் வீட்டோட விவரமே வாங்காமல் கொடுப்பேன் என்றால் என்ன கொழுப்பு??????
{இன்னும் முழு விவரம வெளியாகவில்லை அதையும் மனதில் வைத்து கொள்ளவும்}
----------------------------------------------------
இப்போது இங்கே கொஞ்சம் முக்கியமான விசயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் , அது என்னவென்றால் :
இது எதோ பேங்க் மேனேஜர் மட்டத்தில் நடந்த விஷயம் அல்ல. அப்படி நடக்கவும் முடியாது. ஏன் என்றால் சாதாரண வீட்டுக் கடனே கூட வங்கி மேலாளர்க்கு 40லட்சம் வரை தான் பவர் இருக்கும். அதைத் தாண்ட தாண்டக் கடன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க மேல்மாடத்தில் உயர் அதிகாரிகள் தான் 5 கோடி 10கோடி என்று கடனை முறையாகச் சரிபார்த்து வழங்குவர்.
ஆனால் இந்த மாதிரி 1000கோடி , 1500கோடி என்றால் அமைச்சர்கள் , அதிகாரிகள் மட்டும் அல்ல ரிசர்வ் வங்கியின் துணை கூட வேண்டி வரும். ஏன் என்றால் இதுபோல கடன் விவகாரம் எல்லாம் நான்கு ஐந்து வங்கிகள் இணைந்து வேலை செய்யும்... அந்த நேரத்தில் நாட்டில் நிதி அமைச்சர் நமது சிதம்பரம் , அந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். இதில் மறைக்கக் படும் உண்மை Dinesh Dubey 2013ல் இந்த விசயத்தின் வீரியத்தை வெளியே கொண்டுவந்த பின் என்ன ஆனார்???? பதவி வேண்டிய சூழல் உருவானது யார் காரணம்????
இப்போது இந்தியாவில் இதனை பெரும் முறைகேடுகள் வெளிவராது இருந்ததன் காரணம் ஒரு முறைப்படுத்த முடியாத கணக்கு வழக்கு.. ஒரு அரசு ஊழியர் சொத்துகளை இங்கே வாங்கிவிட்டு - லஞ்சமாக வாங்கும் கோடிகளை இன்னொரு மாநிலத்தில் எளிதில் பதுக்கி வைக்க முடிந்தது மட்டும் அல்ல அதைச் சுதந்திரமாக அனுபவிக்கவும் இங்கே வழி இருந்தது.
இன்று அவை அனைத்தும் ஆதார் இணைப்பின் பின் முறைப்படுத்த பட்டு விட - மிக மிக முக்கியமாக demonetisation மூலம் ஏறக்குறைய 2.24 லட்சம் shell company மூடியதன் மூலம் இந்தியாவில் புதருக்குள் ஒளிந்திருந்த அனைத்துப் பாம்புகளும் வெளியே ஓடிவருகின்றன...இந்தப் பாம்புகளுக்கு இந்த நாட்டைக் கொடுத்து குட்டிசோராக்கிவிட்டு அனைத்தையும் தாங்கள் செய்துவிட்டு இன்று பாம்பு வருகிறது பிடிக்காமல் விட்டுடாங்க போச்சு ஐயோ நாடு போச்சுன்னு நடிக்கிறானே இந்த காங்கிரஸ் இவனை விட நாட்டில் ஒரு அயோக்கிய கும்பல் உண்டா. இதனால் தான் ரகுராம் ராஜன் தொட்டு அனைத்து நல்ல மனிதர்களாக தங்களை காட்டிக்கொண்ட அனைவரும் demonetisation தேவை இல்லை என்றனர்.
என்ன shell company???? இல்லாத ஒரு நிறுவனத்திற்கு ஒரு வர்த்தக வரலாற்றை உருவாக்கி அதன் பெயரில் வியாபாரங்கள் நடத்த , தவறு நடந்தால் தப்பிவிடலாம் அல்லாவா. நிறுவனமே இல்லையே பின்ன என்ன... அது தான் இந்த நாட்டில் அனைத்துச் சினிமாவில் புழங்கும் பல கோடி கருப்பு பணம் முதல் தீவிரவாதிகளுக்கு பணத்தைக் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தும் இந்த வழி தான்.மீண்டும் கூறுகிறேன் ஒரு நிறுவனம் இரண்டு நிறுவனம் அல்ல சுமார் 2.24 லட்சம் நிறுவனகள் இப்படி ஒரே வாரத்தில் இழுத்து மூடிவிட்டு ஓடினர்.
அந்தப் பாம்புகள் தான் ஒவ்வொன்றாக வெளியே வருகிறது இப்போது.
---------------------------------------------------------
சரி சார் நீங்கள் சொல்ற எல்லாம் சரி... இப்போது தப்ப விடுவது பிஜேபி தானே??? பிடிக்கவேண்டியது தானே???
இங்கே இன்னொரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். சும்மா ஒரு விளையாட்டுக்கு சொல்றேன் - இந்த உலகமே அழிய போகிறது... அமெரிக்கா , பிரிட்ஸ் போன்ற முன்னேறிய நாடுகள் தங்கள் மக்களை மட்டும் உலக அளவில் காப்பாற்ற அழைத்தால் என்ன நடக்கும் தெரியுமா???? நமது நடிகர் விஜய் முதல் கிரிக்கெட் வீரர் விராட் வரை அனைவரும் பறந்து விடுவர்.
அதாவது எல்லோருக்கும் இங்கே இரட்டைக் குடியுரிமையுடன் தான் வாழ்கிறார்கள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நாளைக்கு நீங்களும் பல கோடிகளை சம்பாரித்தால் இன்னொரு நாட்டின் குடியுரிமையை வாங்கி வைத்துக் கொள்ளத்தான் போகிறீர்.. அது தனிப்பட மனிதனின் உரிமை.
இப்படி வசதியான நபர்கள் அனைவரும் எதோ ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றுகொண்டு , அந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்துக் கொள்ளும் போது - அவர்களுக்கு இந்த நாட்டை விட்டுக் கிளம்புவது என்பது ஒரு 2மணி நேரம் முன் முடிவு செய்தால் போதும். ஏன் என்றால் அவர்கள் அவர்கள் நாட்டிற்குச் செல்ல என்ன விசாவா கேட்கப் போகிறான்???? இது புரிகிறதா?????? காரணம் இல்லாமல் இவர்கள் பாஸ்போர்ட் முடக்கவும் முடியாது என்பது இன்னொரு சிக்கல். காரணம் வெளிவரும் முன்பே தப்பி ஓடுவது அதிகாரிகள் துணையால்... நமது அரசு ஊழியர்கள் பற்றி நான் சொல்லி தெரியத் தேவை இல்லை.
பலர் விமான நிலையம் , விசா , இமிக்ரேஷன் என்று airport authority சமாச்சாரம் தெரியாமல் இருக்கிறார்கள். எனவே இவரைத் தப்பி செல்ல எதோ பிஜேபி அனுமதி வழங்கியது போல கூறுகிறார்கள். இவ்வளவு பாம்புகள் வெளியே வருகிறது.. ஒன்று இரண்டு பாம்புகள் கொஞ்சம் தூரம் ஓடிவிடுகிறது. அதனாலேயே அந்தப் பாம்புகள் தப்பியதாக அர்த்தம் அல்ல.
-------------------------------------------------
அப்போ பிஜேபி உடனடியாக பிடிக்க வேண்டியது தானே????
நீங்கள் எதோ ஒரு நாட்டில் இப்படித் தவறு செய்து விட்டு இந்தியாவில் வந்து உக்காந்து கொண்டீர். இந்தியாவில் நீங்கள் இந்தியர்... உங்களுக்கு இந்திய சட்டம் முழுவதுமாக பொருந்தும். உங்களுக்கு அனைத்து சாதாரண குடிமகனின் உரிமைகளும் உண்டு. மலேசியா வந்து கேட்டால் முறையான ஆவணங்கள் - அதை நீதிமன்றம் விசாரணை செய்து அந்த நாட்டிடம் ஒப்படைக்கக் கூறினால் மட்டுமே செய்ய முடியும்.
மலேசியா கேட்டதும் பிடித்துக் கொடுக்க அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே அதே போல் தான் அந்த நாடுகளின் குடிமகனாக இருக்கும் மல்லையா , நிரவ் மோடி போன்றவர்கள் அந்த அந்த நாடுகளின் சட்டங்களை பயன்படுத்தி தற்காலிகமாக பாதுகாப்பு பெறுகிறார்கள். ஆனால் முறையான விசாரணை முடிவில் நிச்சயம் அவர்கள் நாடு கடத்தப்படுவர். சிறிது நாட்கள் ஆகலாமே ஒழியத் தப்ப முடியாது.
அதே நேரம் நமது தந்தி செய்தி தாளில் பார்த்ததும் ஓடிப் போய் கைது பண்ணிலாம் வரமுடியாது.
--------------------------------------------
அப்போ 1000 கோடி , 2000கோடி வாங்கும் பெரும் முதலாளிகள் எல்லாம் இப்படி தானா?????
இப்படிப் பேசுவது முறையல்ல... வங்கிக் கடன் கொடுப்பது ஆக முக்கியமான விஷயம். ஆனால் அதை முறையாகக் கொடுக்காமல் தனக்கு வேண்டியவன் அனைவர்க்கும் எந்த வித உத்திரவாதமும் வாங்காமல் கொடுத்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நல்லவர்கள். ஆனால் இன்று தன்னை குடிசை தொழில் என்று கூறி வெறும் பீடி மூலம் 150கோடி சொத்துகள் சேர்த்த சையது பீடி , நல்லண்ணை விற்கிறேன் என்று திரிந்த கோல்ட் வின்னர் தொட்டு அனைத்து இடங்களிலும் வருமானவரி துறை சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவது உங்கள் அனைவருக்கும் தெரியும் தானே??????
அதே நேரம் கடன் வாங்கிய எந்த ஒரு குடிமகனின் நிறுவனத்தின் தன்மையை உணரவேண்டியது அனைத்து ஆட்சியர்கள் கடமை.
அனைவருமே வாங்கிவிட்டு ஏமாற்றவேண்டும் என்று திரிவார்கள் என்று நீங்கள் டீ கடையில் உங்கள் பொறாமையில் கூறலாமே ஒழிய 35,000பேருக்கு வேலைக் கொடுத்து நிறுவனம் நடத்தும் ஜிண்டால் ஸ்டீல் , இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்குத் தேவை என்ன விதமான வியாபார சிக்கல் இருக்கு என்று நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டியதும் அவசியம்.
ஏன் என்றால் இவர்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்கள்... இவர்கள் வளர்ச்சி முக்கியம் , இவர்கள் நிறுவனங்கள் உலக அளவில் சென்று வியாபாரம் செய்வது மூலம் நாடு வலுவான நிலையை எட்டும் என்பது கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் புரியும். (கோகோகோலா , Johnson & Johnson, Intel , Cisco , Pizza Hut என்று அமெரிக்க நிறுவனங்கள் இங்கே வியாபாரம் செய்வது மூலம் மறைமுகமாக வரி கொண்ட வருமானம் அமெரிக்க நாட்டுக்கு இந்த நிறுவனங்கள் மூலம் அதிகம் கிடைக்கிறது. அது லாபகரமான விஷயம் தானே??? அதே போல தான் இந்திய நிறுவனங்களும் பல நாடுகள் சென்று வியாபாரம் செய்ய ஆதரிக்கவேண்டும். }
Unilever என்ற நிறுவனம் தான் இந்தியாவில் உள்ள அணித்து சோப்பு சாம்பு என்று வித விதமாகப் பெயர்களில் விற்பவர்கள். இந்த நிறுவனம் UK நிறுவனம் - இந்த நிறுவனத்தால் அந்த அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் மட்டும் அல்ல சுமார் 174,000 பேருக்கு வேலைவாய்ப்பும் தருகிறது.
Shell என்ற Royal Dutch Shell நிறுவனம் மட்டும் தன்னுடைய உலக அளவிலான வியாபாரம் மூலம் United Kingdom அரசுக்கு சுமார் ஆண்டுக்கு 1,13,160கோடி வரை வரி கட்டுகிறது.. .இது அந்த நாட்டிற்கு எவ்வளவு பெரிய சொத்து?????
அதே போல தான் இந்தியாவில் உள்ள நிறுவனங்களும்.... {இங்கே கார்ப்பரேட் எதிர்ப்பு பேசும் முட்டாள் எல்லாம் சேர் மார்கெட் என்றால் என்ன , வங்கி என்றால் என்ன , ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த உலக மார்கெட் என்று எந்த அறிவும் இல்லாத - வெறும் பணக்காரன் என்றால் கெட்டவன் என்ற சினிமா பைத்தியங்கள். அம்பானி சொத்துக்கு அவரே ICICI போல 10வங்கிகளை நடத்த முடியும் என்னும் போது அவர் எதற்கு உங்கள் வங்கி கடன் வாங்க வேண்டும்??? என்ற அடிப்படை அறிவுடன் சிந்தித்தால் இவன் எல்லாம் என்றோ வியாபாரம் தேடி ஓடி வீட்டைக் காப்பாற்றி இருப்பானுக்க. உள்ளூர் உற்பத்தியாளர் வந்தால் கார்ப்பரேட் என்று எதிர்க்க வேண்டும்.... வெளிநாடுகள் நிறுவனம் என்றால் சொல்லவே வேண்டாம்... சரி இவனது வியாபாரம் செய்வான என்றால் இந்த போராளி குரூப் இருக்கே எந்த அறிவும் இல்லாத முட்டாள்கள் கூட்டம்.. விவசாயம் செய்பவனை போட்டோ எடுத்து அதை போட்டோசாப் செய்து உணர்வு பூர்வமாக கமென்ட் போடுவது இவன் வேலை.... ஆனால் போடோ எடுத்த கேமரா , போட்டோ சாப் நிறுவனம் யார்??? அட FAcebook whatsapp கூட ஒரு நிறுவனம் தானே. அந்த அறிவுலாம் இருக்காது.}
இதை ஏன் கூறுகிறேன் என்றால் :
ஒரு பக்கம் நிரவ் மோடி, மல்லையா என்று சூதாட்டம் போல வங்கி அதிகாரிகளைக் கையில் வைத்துக் கொண்டு வங்கி பணத்தை எடுக்கும் சூதாடிய கூட்டம் உண்டு மறுப்பதற்கு இல்லை.அதே நேரம் ஸ்டீல் நிறுவனகள் வாங்கிய கடனை கட்ட முடியாத காரணம் உள்நாட்டு வரத்த பாதிப்பு என்று கூற.. உள்ளூர் உற்பத்தியாளர்கள் கஷ்டமும் நாம் புரிந்து கொள்ளவேண்டிய சூழலில் உள்ளோம். எனவே கடன் வேண்டும் என்றே திருட்டு நோக்கம் கொண்டவர்களும் உண்டு - உண்மையில் கடன் வாங்கி வியாபாரம் விரிவுபடுத்த அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி சக்தியை கூட்டவும் ஆர்வம் உள்ளவர்களும் உண்டு. எனவே ஒரு நிர்வாகியாக நாம் அனைரையும் குறை சொல்வதை விட முறையாக செய்யாத நபர்களை தூக்கில் தொங்க விடுவது தான் நலம்.
அப்படி என்றால் நம்ம காங்கிரஸ் சிதம்பரம், மனுசிங்க்வி அவர்களை தான் பிடித்து கட்டவேண்டும்.
--------------------------------------------------
இறுதியாக :
நான் மறுபடியும் கூறுகிறேன் :
மோடி என்ற நபரின் அவர் அண்ணன் , தம்பி , அம்மா என்று அனைவரது சொத்து விவரங்களையும் எடுங்கள்... தாராளமாக் தேடுங்கள் அவர்கள் நடுத்தர குடும்பம் தான். இத்தனைக்கும் அவர் 13வருடங்கள் தொடர்சியாக ஆட்சியில் இருந்தவர். ஆனால் அவர் அண்ணனுக்கு எந்த அதிகாரத்தையும் பயன்படுத்து உதவாதவர். அப்படி இருந்த மோடி அவர் குடும்பத்தார் மீது எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாதவர்கள் - இன்று கார்ப்பரேட் எதிப்பு என்று ஒரு வழியை பயன்படுத்தி அனைத்து பெரும் நிறுவனங்களையும் மோடி மோடி என்று இணைத்து கூச்சல் போடுவது கீழ்தரமான தந்திரம் இல்லாமல் வேறு என்ன.
திமுக , காங்கிரஸ் , கம்யூனிஸ்ட இன்னும் பிரிவினை ஓநாய்கள் கூட்டம் ஒருவனுக்கு இங்கே வக்கு இருந்தால் மதவெறி , ஜாதி வெறியை விட்டு விட்டு மோடி என்ற தனி நபர் மீது ஒரு ஒரே ஒரு வழக்கு பதிவு செய்யுங்கள் நான் என் நாட்டை விட்டு வெளியேறுகிறேன்.. உன்னிடம் ஆதாரம் இருக்கும் என்றால் முதலில் வெறும் குற்றபத்திரிக்கை தாக்க செய் அது போதும்...
தி இந்து விகடன் the indian express என்று பத்திரிகைகள் எழுதுகிறார்களே???
இவனுக தானே குஜராத் கலவரத்தை மோடி நடத்தினார் , முஸ்லிம் மக்கள் படுகொலை , இன படுகொலை என்று செய்தி பரப்பினவர்கள்!!!! இவனுகளை இன்னுமா நம்புகிறீர்????? குஜராத் கால்வர முழு அறிக்கை வெளியிட்ட பொது இரண்டு மதத்தவரும் கொலை செய்யபட்டது வெளிவந்த பொது ஓடி இழுந்த கூட்டம் தானே இவர்கள். அதில் மோடி அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியும் இன்றுவரை அவரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று செய்தி பரப்பியே வந்த கூட்டம் இது. இன்று வரை இஸ்லாமியர் நம்பிக்கை விசயத்தில் கூட ஒரு முறைகூட தவறாக பேசாத மோடி அவர்களை - ஏறக்குறைய முஸ்லிம் விரோதி என்று ஆக்கியது முழுக்க கம்யூனிஸ்ட் ஓநாய்கள் நடத்தும் பத்திர்க்கைகள் செய்தி,headline psychology தான் காரணம்.
செய்தி ஊடகம் என்று இருக்கும் இந்த புதிய தலைமுறை தொட்டு தி இந்து வரை அனைவரும் ஏதோ ஒரு உள்நோக்கமுடன் இயங்குவது அப்பட்டமான உண்மை. அதுவும் செய்தி நிறுவனம் எவன் யோக்கியன் இங்கே நடத்துகிறான்????
அட 13வருடம் அவர் முதலமைச்சராக இருந்த போது அவர் ஒவ்வொரு நடத்தையையும் கண்கொத்தி பாம்பாக காங்கிரஸ் , சிதம்பரம் கூட்டம் கண்காணித்தும் அவர் மீது ஒரு சின்ன வழக்கு கூட போடா முடியாமல் தவித்து நியாபகம் இல்லையா????
பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த கலைஞர் குடும்ப சொத்தான திமுக , சசிகலாவின் குடும்ப சொத்தாக இருந்த அதிமுக என்று ஆரம்பித்து இங்கே தமிழகத்தில் எவனுக்கும் மோடியை குறை சொல்ல தகுதியே கிடையாது.. எனவே ஏதாவது ஒரு விசயம் நாட்டில் நடந்தால் உடனடியாக மோடி மோடி என்று எப்படியாவது சுழித்து விட அலையும் வெறுப்பு என்ற வெறிபிடித்த கூட்டம் சொல்லி புரியவைக்க முடியாது.
நடுநிலையாக இருபவர்கள் கொஞ்சமாது நிர்வாக விவரங்கள் , குற்றத்தின் வரலாறு , எங்கே தவறு எப்போ யார் துணையுடன் நடந்தது - இன்று என்ன நடக்கிறது என்று பொறுமையாக சித்திக்கவும். முதலில் அவசர கதியில் எதையும் நம்பவேண்டாம். அதுவும் நம்ம ஊரில் இந்த மிமீஸ் கூட்டம் ஒன்று உண்டு. அவனை முதலில் நம்பாதே. உன் உணர்வை தூண்ட தான் அவன் துடிக்கிறான் எச்சரிக்கையாக இரு.
காங்கிரஸ் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை நாசம் செய்தது காங்கிரஸ் என்றால் - தொழில் சங்கம் நடத்துறேன் பேர்வழி என்று அனைத்து அரசி சுமார்300 PSU நிறுவனங்களில் 90% நஷ்டம் ஆகினது போதாது என்று - எந்நேரம் பார்த்தாலும் எனக்கு சம்பளம் போதாது என்று அரசு ஊழியர்களை தூண்டி விடும் கம்யுனிஸ்ட் தொழில் சங்கங்கள் ஒருபக்கம் - கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எவன் நாசமா போன என்ன நாடு எந்த கேடு வந்தா எனக்கு என்ன எனக்கு லஞ்சம் தா காசு தான் என்று காசு காசு திரியும் அரசு ஊழியர்கள் ஒருபக்கம்...
இந்த மொத்த கூட்டத்தையும் வைத்து கொண்டு இந்தியா என்ற ராட்சத இயந்திரத்தை இயக்குவது நீங்கள் நினைப்பது போல சாதாரண காரியம் அல்ல. அவை அனைத்திலும் போதுமான சீர்திருத்தங்களை மோடி செய்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. நான்கேட்டு கொள்கிறேன் தயவு கூர்ந்து அனைத்து நிர்வாக விவரங்களையும் தேடி படி.. வங்கி முதல் ராணுவம் வரை அனைத்தின் உண்மை நிலை புரியும்.
நன்றி மாரிதாஸ்
இணையம்