வெந்தயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:15 PM | Best Blogger Tips


வெந்தயத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்ககள் !!!
வெந்தயத்தை இலேசாக கருகாமல் வருத்து, ஆறவைத்து பொடி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவைக்கேற்ப ஒரு ஸ்பூன் வெந்தயப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனால்...


👉 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
👉 கொலஸ்ட்ரால் குறைகிறது.
👉 நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது.
👉 தாய்பால் சுரப்பு அதிகரிக்கிறது.
👉 மார்பக புற்றுநோயை தடுக்கிறது.
👉 உடல் பருமன் குறைகிறது.
👉 இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.
👉 ஆண்மை விருத்தியடைகிறது.
👉 பெண்களுக்கு மார்பக வளர்ச்சியை தூண்டுகிறது.
👉 உடல் சூட்டை குறைக்கிறது
👉 வயிற்று கடுப்பை நீக்குகிறது.
👉 மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது
👉 மூட்டு தேய்மானம் மற்றும் மூட்டுவலியை குறைக்கின்றது.
👉 கோடையில் ஏற்படும் நீர்கடுப்பை நீக்குகிறது.

👉 தயிர் உரைபோடும் போது அதில் கொஞ்சம் வெந்தயத்தை ஊரப் போட்டு மறுநாள் அதை தயிருடன் சாப்பிட்டுவர கர்பப்பை சம்மந்தமான நோய்கள் நீங்கி ஆரோக்கியமடைகிறது. மேலும் வெள்ளைப்படுதல் குணமாகிறது.

👉 வெந்தய விழுது:-
தலைமுடி வேர்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க முடி கருமையுடன் நன்றாக வளர்கிறது.
👉 விழுதை பருக்கள் மீது தடவிவர பருக்கள் மறைகிறது.
👉 புளித்த இட்லி மாவு அல்லது தயிருடன் வெந்தயத்தை அரைத்து தீப்புண் மீது தடவ, எரிச்சலை நீக்கி, கொப்பளம் வராமல் தடுக்கிறது.

👉 நீரிழிவு நோயாளிகள் அரை ஸ்பூன் வெந்தயத்தை காலையில் ஒரு குவளை தண்ணீரில் போட்டுவைத்து, இரவில் அந்த நீரை வடித்துவிட்டு குவளையை மூடியுடன் கவிழ்த்து வைத்துவிடவேண்டும். மறுநாள் காலையில் அது முளைவிட்டிருக்கும். நீரிழிவு நோயாளிகள் அந்த முளைவிட்ட வெந்தயத்தை காலையில் நன்றாக மென்று சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படுகிறது.

பொதுவாக வெந்தயம் குளிர்ச்சி தன்மையுடையது. அதை தொடர்ச்சியாக சாப்பிடாமல் விட்டு விட்டு தேவைக்கேற்ப சாப்பிடலாம். நன்றி!





நன்றி இணையம்