4 முறை பாராளுமன்ற உறுப்பினர் வாஜ்பாயி அரசில் நிலக்கரி துறை இணை அமைச்சர், இன்று மத்திய பிரதேசத்தின் தாமோ தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்...
கிட்டத்தட்ட சாக்கடை போல இருக்கும் நீரில் இறங்கி செடி கொடிகளை நீக்கி தூய்மைப்படுத்துகிறார்.
இந்தியாவில் பாஜவை விட பழைய கட்சிகள் உண்டு....நூறாண்டு, ஐம்பதாண்டு பழமையான கட்சிகள் இருக்கின்றன அவை அனைத்தும் ஒரு மாநிலத்தையே தாண்ட முடியவில்லை...ஏனென்றால் அவை சாதி ஒட்டு அல்லது குறிப்பட்ட இனத்தவரின் ஓட்டுக்களை நம்பியே, அவர்களை வைத்தே அரசியல் செய்து பிழைப்போட்டுபவை.
குறுகிய காலத்தில், கட்சி ஆரம்பித்து 15 வருடங்களில் தேசத்தின் தனிப்பெரும் கட்சி, 18 ஆண்டுகளில் ஒரு கூட்டணி ஆட்சி, 33 ஆண்டுகளில் அறுதி பெரும்பான்மை, இன்று 18 மாநிலங்களை ஆளும் ஒரே இயக்கம் பாஜ தான்.
அதற்கு காரணம் அதை இயக்குபவர்களின் பெரும் அரசியல் அறிவோ சாணக்யத்தனமோ இல்லை அதன் தொண்டர்களின் தளராத உழைப்பும் ஒரு சித்தாந்தத்தின் மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கையும் தான். பதவி என்றுமே ஒரு பொருட்டல்ல மக்கள் சேவையே பிரதானம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறது.....
நன்றி இணையம்