அப்பாவை பற்றிய ஒரு அற்புதமான பதிவு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:23 | Best Blogger Tips

அப்பா

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே....
படித்ததும் பிடித்ததுடன் கண் கலங்க வைத்து விட்ட அருமையான ஒரு பதிவு.

அப்பா நமக்காக எது செய்தாலும்,
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக மட்டுமே இருக்கும்.
உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை.
வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளிர்கின்றன. .
நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், 
செதுக்கி எடுப்பதால்தான்.
அவர் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.
தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.
" ஆனால் தந்தை அப்படி அல்ல "
தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.
ஒரு சொல் கவிதை அம்மா !
அதே ஒரு சொல் சரித்திரம் -அப்பா !
தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.
தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.
நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே கடவுளாக தெரிகிறார்.
தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.
அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.
எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, உருவப்படத்திற்கு கொடுக்கும் ஆடம்பர அபிஷேக ஆராதனைகளை, அவர்கள் பெற்றுக் கொண்டதாக நாம் எண்ணலாமா?
அவர்கள் ஆன்மா ஏற்றுக் கொள்ளுமா?!
" தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."........நெஞ்சார்ந்த நன்றி.

 நன்றி இணையம்