எல்லா_நாளும் பிரதோஷம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:30 | Best Blogger Tips
Related imageRelated image
# வருடத்தின்_எல்லா_நாளும் பிரதோஷம்! அதிசய கோயில்.
பொதுவாக ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும். லிங்கத்திற்கு எதிரில் நந்தி இருக்கும். ஆனால் இந்த கோயிலில், ஆவுடையார் மீது நந்தி, நந்தியின் மீது சிறிய லிங்கமாக ஈசன். வீற்றிருக்கும் இது போன்ற அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. அதனால் இந்த கோயிலில் உள்ள நந்தியையும் சிவனையும் தரிசிக்கும் எல்லா நாளுமே பிரதோஷ நாளாக கருதப்படும். மேலும் இந்த கோயில் மலை மீது உள்ள குகையில் அமைந்திருக்கிறது. கோயிலை கட்டியது சித்தர் பெருமக்கள் என்கிறார்கள்.
இன்றும் இங்கு சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மிக பிரமாண்டமான ஏழு கற் பாறைகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு இசை என ஏழு ஸ்வரங்களை தரும் அதிசய கல்லாக இருக்கிறது. ஆயிரம் அடி உயர மலையில் பிணிகளை போக்கும் அரிய சுணைகள் இருக்கிறது.
நந்தி இருக்கும் குகைக்கு மேலே உள்ள இன்னொரு குகையில் கிருஷ்ணரின் சிலை இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இத்தனை பெருமைகளை கொண்ட இந்த மலை வாலாஜா அருகே இருக்கிறது. இதன் பெயர் அனந்தலை மலை. ஆனால் இங்கு இயங்கி வரும் கல்குவாரிகள் இந்த அற்புத மலை மற்றும் சிவன் கோயில் உள்ள குகையை வெடி வைத்து தகர்க்க திட்டமிட்டு அது சிவ பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம். அதை தடுப்பதற்கு ஒரே வழி நாம் அணி அணியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலமே தடுக்க முடியும். சித்தர்கள் உருவாக்கிய இந்த அரிய சிவாலயத்தை காப்போம், நந்தியின் அருளை பெறுவோம். நன்றி!
ஓம் நமச்சிவாய.