வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்.... வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து.

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 AM | Best Blogger Tips

ஒரு பெண்ணை வைத்து சூதாடியதை புத்தகமாக வைத்து படிக்கும் ஊா் என #மஹாபாரதத்தை கிண்டல்
#கமால்ஹசன் -செய்தி...
முழவதும் படித்தறியா மூடனே
தலைக்கனம் பிடித்த தருக்கணே
கிளுகிளுப்பு கிறுக்கனே
சாதி உணர்வை தூண்டி படமெடுத்து
சம்பாதித்த வீனனே
வீட்டை விற்க போகிறேன்
நாட்டை விட்டே போகிறேன்
காசே இல்லைஎன
கள்ள கண்ணீர் வடித்த கயவனே
ஐந்து கோடி கொடுத்தால்
அம்மணமாய் நிற்கும் அசிங்கமே
படித்து பார் பாரதத்தை
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்..
மகாபாரதம் தான்.....
மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....
சத்தியம் செய்துவிட்டால் 
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...
குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....
பெற்றோர் திரையிட்டால்
பிள்ளைகள் தறிகெடுவார்கள்
கௌரவர்கள்...
பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...
கூடா நட்பு 
கேடாய் முடியும்
கர்ணனாய்...
சொல்லும் வார்த்தை 
கொல்லும் ஓர்நாள் 
பாஞ்சாலியாய்..
தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....
பலம் மட்டுமே
பலன் தராது 
பீமனாய்....
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....
சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ
நிதர்சனம் உணர்ந்தவன் 
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....
பெண்ணை வைத்து பந்தயம் செய்தால்
மன்னனே ஆனாலும் மண்ணாய் போவான்
தருமனேஆனாலும் கருமம் காண்பான்
மேகமாய் கண்ணீர் விட்டும்
போகமாய் பெண்னை
மோகமாய் தீண்டினால்
காகமாய் கூடினாலும்
சோகமாய் போவான்
வேகமாய் வீழ்வான்
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து..
கேவலமான ஒரு பிறவி என்றால் அது அவன் மிகை அல்ல
இவனை விட பயந்தகொல்லி ஊாில் இல்லை
தாய்க்கும் தாரத்திற்கு வித்தியாசம் தொியாது ஒரு மூடன் அவன்