ஒரு முறை திருதராஷ்டிரன்,
தன்
சகோதரர்
விதுரரிடம்,
‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம்
என்பர்.
எனினும்
இதுவரை
நூறு
வருடங்களைக்
கடந்த
மனிதர்கள்
எவரும்
இல்லை
என்றே
தோன்றுகிறது.
இதற்குக்
காரணம்
என்ன?’’
என்று
கேட்டார்.
விதுரர்
பதில்
சொன்னார்:
‘‘அரசே மனித ஆயுளை அறுக்கும்
வாள்கள்
ஆறு.
முதலாவது
கர்வம்.
மனிதர்களில்
பலர்,
‘இந்த
உலகில்
நானே
கெட்டிக்காரன்.
மற்றவரெல்லாம்
முட்டாள்!’
என்று
நினைக்கிறார்கள்.
ஒருவனுக்கு
கர்வம்
ஏற்பட்டால்
கடவுள்
சும்மா
இருக்க
மாட்டார்.
ஆகவே,
கர்வம்
இல்லாமல்
இருக்க,
தனது
குற்றம்
குறைகளைப்
பார்க்க
வேண்டும்.
பிறரிடம்
நற்குணங்களையே
பார்க்க
வேண்டும்.
இரண்டாவது
வாள்-
அதிகம்
பேசுவது.
தனக்குப்
பேச
விஷயங்கள்
இல்லாதபோதும்,
வீண்
பேச்சு
பேசுபவன்,
வீண்
வம்பை
விலைக்கு
வாங்குகிறான்.
மூன்றாவது
வாள்-
தியாக
உணர்வு
இன்மை.
அதீத
ஆசையே
மனிதனின்
தியாக
உணர்வைத்
தடுக்கிறது. இதை உணர்ந்தால்,
தியாக
உணர்வு
தானே
வரும்.
நான்காவது
வாள்-
கோபம்.
கோபத்தை
வெல்பவனே
உண்மையான
யோகி.
கோபம்
வந்து
விட்டால்,
தர்மம்
எது?
அதர்மம்
எது
என்பது
தெரியாமல்
போகிறது.
விவேகம்
இழந்து
பாவங்களைச்
செய்ய
நேரிடுகிறது.
ஐந்தாவது
வாள்-
சுயநலம்.
சுயநலமே
எல்லா
தீமைகளுக்கும்
காரணம்.
சுயநலம்
கொண்டவன்
தனது
காரியத்துக்காக
பாவம்
செய்யத்
தயங்குவதில்லை.
ஆறாவது
வாள்-
துரோகம்.
இந்த
உலகில்
நல்ல
நண்பர்கள்
கிடைப்பதே
அரிது.
அப்படிப்
பட்டவர்களுக்குத்
துரோகம்
செய்வது
தவறு.
இந்த ஆறு விஷயங்களிலிருந்தும்
ஒருவன்
விலகி
வாழ்ந்தால்
நிச்சயமாக
அவன்
நூற்றாண்டை
நிறைவு
செய்வான்.’’...
💐
💐













