*எண்ணங்களை கவனி:*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips

*ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்திருக்கும்போது உன்னை சுற்றி அலைந்து கொண்டிருக்கும் எண்ணங்களை பார்.*
*அதனுடன் ஒன்றி விடாதே.*
*பைத்தியமாகி விடுவாய்.*
*பைத்தியம் என்றாலே ஏதாவது ஒரு எண்ணத்துடன் ஒன்றி விடுவதுதான்.*
*எந்தவித எண்ணத்தையும் அடையாளப்படுத்தி கொள்ளாமல் கவனித்து கொண்டேயிரு.*
*மீண்டும் அடையாள படுத்தி கொள்வாய். மீண்டும் மீண்டும் கவனி.*
*இதை உன் வழக்கமாக்கி கொள்.*
*நீ எங்கே இருந்தாலும் கவனித்து கொண்டே இரு.*
ஆனால் 
*
இயல்பாக இருக்க வேண்டும்.*
*அதற்காகத்தான் அமர்ந்து தியானத்தை பழக சொல்கிறார்கள்.*
*அப்போதுதான் இயல்பாக கவனிக்கும் நுட்பத்தை அறிய முடியும்.*
ஆனால் 
*
ஞாபகத்தில் வைத்து கொள்.*
*அமர்ந்து தியானம் செய்தல் மட்டுமே போதாது.*
*அதை உன் வாழ்க்கை முறையில் கொண்டு வந்த பின்னர் நீயே இயல்பாகி விடுவாய்.*
*அங்குதான் தியானமே தொடங்குகிறது*
🌷🌷 ~ஓஷோ~ 🌷🌷