சிறப்பு மகத்துவம்
உள்ளது. ஆடி
மாதம் தட்சிணாயனத்தின்
தொடக்கம். தேவர்களின்
இரவுக்காலமாக இதனைக்
கருதுவர். ஆடி
மாதத்தை 'சக்தி
மாதம்' என்று ஜோதிட
நூல்கள்
குறிப்பிடுகின்றன.
தட்சிணாயணம்
துவங்கும்
ஆடி
மாதத்தில்
சூரியனில்
இருந்து
சூட்சுமக்
சக்திகள்
வெளிப்படும்.
பிராண
வாயு
அதிகமாகக்
கிடைக்கும்.
உயிர்களுக்கு
ஆதார
சக்தியை
அதிகமாகத்
தரும்
மாதம்
இதுவே.
வேத
பாராயணங்கள்,
மந்திரங்கள்,
ஜெபங்களுக்கும்
ஆடி
மாதம்
சிறந்தது.
ஆடி
மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன்
ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்
காலம். ஆடி மாதத்தில் செவ்வாய்,
வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால்
அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி
மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம்
தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில்
அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும்
சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில்
வரும் ஆடிச் செவ்வாய், ஆடி
வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அன்றைய
தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில்
குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன்
பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப்
பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள்.
பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து,
அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ்,
சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து
சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஔவை
நோன்பு: ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு
மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது.
மகாலட்சுமி
வழிபாடு
ஆடி
வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை,
ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை
நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு
தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு,
மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம்
தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு
உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சண்டி ஹோமம்:
ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ
பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி,
மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை,
வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது
வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும்
'நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் 'சண்டி
ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும்
செய்வார்கள்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏