வீரன் வாஞ்சிநாதன் நினைவுதினம் இன்று!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:29 PM | Best Blogger Tips




பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் இருந்து...
"அசோக சக்கரவர்த்தி முடிசூடி அரசோச்சிய பாரத மண்ணில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் முடிசூட்டி விழா நடத்துவதற்காக வர இருக்கும் இந்த வேளையில், அவரது ஆட்சியின் சின்னமான நெல்லை மாவட்ட ஆட்சியாளன் கொடுங்கோலன் ஆஷை சுட்டுப் பொசுக்கிப் பிணமாக்குகிறேன்! புண்ணிய பாரத பூமியை அடிமைப்படுத்தி அடக்கி ஆள எண்ணும் மிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும்" என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்!
பாரத அன்னைக்கு என் எளிய காணிக்கையாக என் உயிரையும் அர்ப்பணிக்கிறேன். இதற்கு நானே முழுப்பொறுப்பு!
இந்தியாவில் முடிசூட்டு விழா நடத்த வர இருக்கும் 5ஆம் ஜார்ஜ் மன்னனை, இந்த மண்ணில் கால் வைத்ததுமே நரகலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மூவாயிரம் பாரத வீரர்கள் காளி மாதாவின் சபதம் எடுத்து, இரத்த சத்தியம் செய்துள்ளனர்!
அவர்களில் மிகவும் சிறயவனான, மிகவும் எளியவனான நான், அந்த 5ஆம் ஜார்ஜ் மன்னனின் நடமாடும் சின்னமாகத் திகழ்ந்தவனும் எங்கள் தலைவர் சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனியை நிர்மூலப்படுத்தி அழித்தவனும் என்னரும் தேசபக்தர்களை வெஞ்சிறையில் பூட்டி, வேதனையில் மாட்டி, செக்கிழுத்துச் சிந்தை நோகச் செய்த செறுக்கனும், அரக்கனுமான கலெக்டர் ஆஷை சுட்டுப் பொசுக்குவதன் மூலம், முடிசூட்டிக் கொள்ள முகமலர்ச்சியோடு வர இருக்கும் ஆங்கிலேய மன்னனுக்கு, இந்திய மக்களின் சார்பில் நான் விடுக்கும் முன் எச்சரிக்கைதான் இந்த செயல்என முடிந்தது இந்த கடிதத்தில்...
வாஞ்சிநாதன் ஆஷ்சை கொன்று, தற்கொலையும் செய்துகொண்டபோது அவருக்கு வயது 25. மணமானவர். மனைவி பொன்னம்மாள் நிறைமாத கர்ப்பிணி. வெள்ளையனை ஒழிப்பதே தன் குறிக்கோள் என்று உயிர்துறந்த வாஞ்சிநாதன் என்ற பிராமணருக்கு குடும்பத்தைவிட நாடுதான் முக்கியமாக இருந்தது..
திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்சை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி.
Thanks to
 Pugal Machendran Pugal