*மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பது மிகுந்த நன்மையாகும்.இதனால் நம் உடம்பு இயக்கம் சிறப்பாக செயல்பட்டு ஆரோக்கியம் கிடைக்கும்,பணவரவு அதிகரிக்கும்.
*நமக்கு வரவேண்டிய பணமோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பணம் வாங்க செல்லும் போது இளம் சாம்பல் நிறத்தில் சட்டை அணிந்து சென்றால் வாங்கும் பணம் நிலைத்து நிற்கும்.
*வீடுகளில் உள்ள தண்ணீர் குழாய்களில் நீர் ஒழுகாமல் பார்த்துகொள்ள வேண்டும்.அப்படி சொட்டு சொட்டாக நீர் ஒழுகினால் வீட்டில் பணம் தங்காது.
*சாப்பிடும் அறையும் பிரேம் கண்ணாடி ஒன்று மாட்டி இருப்பது நன்மையாகும் நாம் சாப்பிடும் போது நம் உணவு இருமடாங்காக தெரிவது சிறப்பாகும் இதனால் நம் இல்லத்திற்கு உணவு பஞ்சம் வராது.
*வீட்டின் கிழக்கு பகுதியின் சின்ன உண்டியல் போன்ற கலயத்தில் சில்லறை காசுகளை போட்டு வைப்பது நல்லதாகும்.ஆனால் அது இருப்பது மற்றவருக்கு தெரியக்கூடாது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.