சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல

மணக்கால் அய்யம்பேட்டை | 9:32 AM | Best Blogger Tips
உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல என்பதை பற்றிய விரிவான சரியான நிறைவான விளக்கம்.
-
கு.நா.மோகன்ராஜ்.
உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல. ஆனால் எந்த நோய்க்கும் மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம் ஒவ்வொரு நோய்க்கும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைக்கிறது. நாமும் சற்றும் சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.
முதலில் சர்க்கரை என்பது நோய் அல்ல என்றால் உடலில் ஏன் சர்க்கரை அதிகரிக்கிறது என்ற கேள்வி வரும். சர்க்கரை என்பது நாம் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகி அதில் இருந்து நமக்கு கிடைக்கும் எரிபொருள் ஆகும். இதனை குளுகோஸ் என்றும் சொல்கிறோம். இந்த குளுகோஸ் நாம் உண்ட உணவில் இருந்து நமக்கு கிடைத்தது என்றும், அதுதான் நமது உடலுக்கு சக்தியும் என்பதில் தெளிவாக இருப்போம்.
இவ்வாறு நாம் உண்ட உணவில் இருந்து கிடைத்த, நமக்கு சக்தி கொடுக்கும் இந்த குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும் இரத்தம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இப்படி எடுத்து செல்லப்பட்ட குளுக்கோஸ் உடலின் தேவைக்கு போக மீதி இருந்தால் அதனை கிளைகோஜன் ஆக மாற்றி கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும். நன்றாக கவனியுங்கள்,
தசை, தசை நார் ஆகியவைளை பராமரிப்பதும் கல்லீரலின் பல வேலைகளில் ஒன்று. கல்லீரல் இந்த கிளைகோஜனை தனது பராமரிப்பில் இருக்கும் தசை மற்றும் தசை நார்களில் கொண்டு சேமிக்க்த்து வைக்கிறது. பின்பு எப்போதாவது உங்கள் உடலுக்கு தேவைப்படும் சமயத்தில் அந்த கிளைகொஜன் மீண்டும் சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு பயன்படுத்தபடுகிறது. இதில் அதிக சர்க்கரை உடலால் எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்த்தோம். மேலும் பார்ப்போம்.
இங்கே ஆங்கில மருத்துவம் சொல்லும் சராசரி என்பது மிகவும் தவறானது. அதன் அடிப்படையில் செல்வது என்பது உடலை பல பாதிப்புகளுக்கு ஆளாக்கிவிடும். அதைப்பற்றியும் நாம் இப்போது பார்ப்போம். அதாவது இரத்ததில் சர்க்கரையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினால் அங்கே பதில் இருக்காது. அவர்களுக்குத்தான் எந்த நோய்க்கும் காரணாம் தெரியாததால் அதை குணப்படுத்தவும் முடியாதே.
ஒரு மனிதரை போல் இன்னொருவர் இருப்பது என்பது நடக்காது. உயரம், நிறம், உருவம், தன்மை,பருமன் என எதுவுமே ஒருவரைபோல் ஒருவர் அச்சு அசலாக இருக்க முடியாத சூழலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மட்டும் எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்பது? நாம் காலையில், இட்லி சாப்பிட்டால் அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும், சப்பாத்தி சாப்பிட்டால் அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும் , சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும் மாறுபடுகிறது அல்லவா?
அப்படி இருக்க ஒவ்வொரு மனிதனும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் உண்ணும் உணவும், அளவும் மாறுபடும் என்பது உண்மைதானே.
அவ்வாறு இருக்க சர்க்கரை மட்டும் அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரைஎப்படி ஒரே அளவாக இருக்க முடியும்? ஆக இரத்ததில் சர்க்கரையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று ஏதும் கட்டுப்படு கிடையாது. உடலின் தேவையை பொறுத்து சர்க்கரையின் அளவு மாறுபடும் என்பதே உண்மை. உங்களுக்கு தேவைப்படும் சர்க்கரையின் அளவௌ உங்கள் உடல் தீர்மானம் செய்து , நீங்கள் உண்ட உணவில் இருந்து சர்க்கரையை தயாரித்துக்கொள்ளும். அதை நீங்கள் கட்டுப்படுத்தினால் உங்கள் உடலுக்கு தேவையான அளவு சர்க்கரை கிடைக்காமல் உடல் பலவீனம் அடையும் இதனை நீங்கள் சர்க்கரைக்கு தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வருபவர்களிடம் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
ஆங்கில மருந்துகள் பக்கவிளைவுகள் உடையது, நான் சித்தா, மூலிகை மருந்துகளைதானே எடுத்துக் கொள்கிறேன் என்றாலும் இரத்ததில் உள்ள, உடல் தனக்கு தேவை என்று தயாரித்து வைத்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தினால் நிச்சயம் உடல் பலகீனம் அடையும். மனதில் பயம், படபடப்பு எற்படும் போது உங்கள் சிறுநீரகத்தில் உள்ள அட்ரீனல் சுரப்பியில் இருந்து, அட்ரீனலின் வெளிப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அப்போது கணையம் அதன் இன்சுலினை நிறுத்திவிடும். மீண்டும் உங்கள் மனநிலை இயல்பு நிலைக்கு மாறும்போது கணையம் மீண்டும் இன்சுலினை கொடுக்க ஆரம்பிக்கும். இபோதும் சர்க்கரையின் அளவு அதிகமாக காண்பிக்கும். இது நிரந்தரமான நிலை இல்லை. தற்காலிகமானதே.
உடலில் எந்த மாதிரியான தொந்திரவுகள் எற்பட்டாலும் உடலே அதை சரி செய்துகொள்ளும். அந்த சுழலில் உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். காரணம் சர்க்கரை என்பது உடலின் செல்களுக்கான சக்தி என்று பார்த்தோமே. பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய தேவையான சர்க்கரையை உடல் உற்பத்தி செய்யும். அதை எந்த நோய்க்கும் மூலகாரணாம் தெரியாத ஆங்கில மருத்துவம் சர்க்கரை என்று பயமுறுத்தி அதை கட்டுப்படுத்தி நம்மை மேலும் மேலும் பலகீனம் அடைய செய்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
சரிங்க சார், நீங்க சொல்வது சரி. ஆனால் அதிகமாக சிறுநீர் கழிகிறதே? இங்கேதான் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
உடல் தனக்கு தேவை இல்லாதவற்றை உடலில் வைத்துக் கொள்ளாது. நல்லவைகளை தன்னுள் வைத்துக்கொள்ளும்.
இந்த தன்மையான உடல் எப்படி அதிகமாக இருந்த குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றி தன்னுள் சேகரித்து வைத்ததோ, அதனை அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறதோ அதுபோல, இதே குளுகோஸின் தரத்தை அறிந்து
அதை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
குளுக்கோளில் தரமா? என்றால், ஆம். தரம் என்று ஒன்று உண்டு.
நமது உடலில் சக்தி குறையும்போது அதனை ஈடு செய்ய
உடலானது நமக்கு பசி என்ற உணர்வை கொடுக்கிறது. அந்த சமயத்தில் நாம் உடலுக்கு நல்ல உணவுகளை கொடுத்து,
வாயால் நன்றாக அரைத்து உமிழ்நீருடன் கலந்து வயிற்றுக்குள் அனுப்பினால், அங்கே அதை செரிமானம் செய்யும் மற்ற திரவங்களும் கலந்து நன்றாக செரிமானம் நடந்து அதில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை தரமான குளுக்கோஸ். இதனை உடல் ஏற்றுக்கொள்ள, தரத்தை நிர்ணயம் செய்ய கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இந்த குளுக்கோஸ் உடல் முழுதும் எடுத்து செல்லப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மீதமானவை கிளைகோஜனாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கிறது.
அதேபோல் முறையான பசி இல்லாத போது, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, நன்றாக வாயில் அரைக்கப்படாமல், நன்கு உமிழ்நீருடன் நன்றாக கலக்காமல் வயிற்றுக்குள் அனுப்பப்படும்போது அங்கே, செரிமாண சுரபிகளில் இருந்து கிடைக்கும் சுரப்புகளும் கிடைக்காமல் உருவாகும் குளுக்கோஸ்
தரம் குறைந்த குளுக்கோஸ். இதனால் உடலுக்கு தீங்கு என்பதால்
உடலே அதனை சிறுநீர்மூலம் வெளியேற்றுகிறது. இதற்கும் நாம் பயம் கொள்ள வேண்டியது இல்லை. ஆனால் இவ்வாறு தரம் குறைந்த குளுக்கோஸ் நமது உடலில் இருந்து வெளியேரும் போது உடலுக்கு சரியான குளுகோஸ் கிடைக்காமல் பலவினம் அடையும். அதனால் ஏற்படும் தொந்திரவுகளுக்கு நாம் அலோபதியை நாடும்போது அவர்கள் சர்க்கரையின் அளவை பார்த்து அதை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் மருந்துகளை கொடுபதால் உடல் வெளியேற்றும் கழிவான தரம் குறைந்த குளுக்கோஸை உடலிலேயே தங்க விடுகிறது. இதனால் மேலும் உடல் பலவீனம் அடையும்.
அதுபோல் இந்த மருந்துகள் கணையத்தை தட்டிதட்டி அதில் இருந்து இன்சுலினை வலுக்கட்டாயமாக எடுப்பதால், கணையம் நிரந்தரமாக செயலிழக்கிறது. இதுவரை தேவைக்கு ஏற்ப இன்சுலினை வழங்கிவந்த கணையம் பாதிக்கபட்டபின் இன்சுலின் ஆனது ஊசிமூலம் கொடுக்கப்படுகிறது. இது மிண்டும் நமது உடலின் உறுப்புகளை பதம்பார்க்கிறது. முதலில் உடலின் தேவைக்காக அதிகரிக்கும் சர்க்கரையை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்துகிறோம். அதனால் உடலுக்கு தேவைப்படும் சக்தி கிடைகாமல் நமது உடலும், உடல் உறுப்புகளும் பலவீனம் அடைந்து தொடர்ந்து உடல் மோசமாகும். தேவை இல்லை என்ற கழிவை உடலில் இருந்து உடல் வெளியேற்றுவதையும் உடலில் தங்கச்செய்து மீண்டும் உடலை பலவினப்படுத்துவதும் தவறு.
சரி இதற்கு என்ன தான் தீர்வு?
எப்போது பசி எடுக்கிறதோ, அப்போது உங்கள் மனதிற்கு பிடித்த உணவுகளை நன்றாக ருசித்து, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுங்கள். தாகம் எடுக்கும்போது நன்றாக சப்பி உதடும், நாக்கும் நனையுமாறு நீர் பருகுங்கள். உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வும், தூக்கம் கேட்கும்போது தூக்கமும் கொடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!
For more info visit:
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
திருக்குறள் (அறிவுடைமை #0423)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.
Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com
Top of Form


நன்றி  Regha Health Care