இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
இஞ்சி - 100 கிராம் வெல்லம் - 200 கிராம் மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம் நெய் - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து
வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த தெளிந்ததை
மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை
கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற பொருள்களை வெறும்
வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். தீபாவளி
அன்று மட்டும் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வயிறு பொருமலாக
இருக்கும்போதும் சாப்பிடலாம்.
[2]
இஞ்சி சாறு - 200 கிராம் வெல்லம் - 200 கிராம் பாதாம், கசகசா, ஓமம் - தலா - 20 கிராம் நெய் - தேவையானது
செய்முறை:
வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கல், மண் போக சுத்தம்
வடித்து, கசகசா, ஓமத்தை வறுத்து பாதாம் பருப்புடன் இஞ்சி சாறை சேர்த்து
அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து அடுப்பில் வைத்து கிளறவும். அவ்வப்போது
நெய் சேர்த்து கிளறவும். பதம் வந்தவுடன் இறக்கவும்.
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகை இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து ..
ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம்,
எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல்..
விண்டுவி டாமல் முருகன் பதமேவு விஞ்சையர் போல அனைவரும்
இஞ்சியினால் நலம் பல பெற்லாம்..
பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல்
தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க
செய்து விடுகிறது.
இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான்.
எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது
பொதுவான மருத்துவ பயன்கள்.
இஞ்சியின் செயல்பாடு பற்றி பல்கலைக்கழக
உணவியல் பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி இஞ்சியின் பல்வேறு மருத்துவ
குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை
ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உள்ளதை சமீபத்தில் எலிகளிடம் நடத்திய சோதனையில்
அறிவித்தனர்.
உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
இஞ்சியை பச்சையாக உணவில் சேர்த்து சிலருக்கு 11 நாட்கள் அளித்தும்.
இன்னொரு குழுவினருக்கு கொதிக்க வைத்த இஞ்சியை அதே 11 நாட்கள் கொடுத்தும்.
அதன் பிறகு நடத்திய சோதனையில் சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை உணவில்
சேர்த்தவர்களது உடல் வலிகளுக்கு நிவாரணம் கிடைத்தது தெரிய வந்ததாம்..
குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு
ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைப்பது ஆய்வில் உறுதியானது. தினமும் உணவில்
இஞ்சி சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகளை 25 சதவீதம் குறைக்க முடியும்
என்கிறது ஆய்வு..
இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி
வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு
வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும். இஞ்சியை
சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து
சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு
தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க்
கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம்,
அடுக்குத் தும்மல் நீங்கும்.
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு
துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம்
காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து
சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு
வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.
இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.