நன்னாரி பால் மற்றும் நன்னாரி கீர் (நாட்டு வைத்தியம்)

மணக்கால் அய்யம்பேட்டை | 12:48 PM | Best Blogger Tips
நன்னாரி பால் மற்றும் நன்னாரி கீர்
(நாட்டு வைத்தியம்)

நன்னாரி கீர்

பால் - 1 லிட்டர், 
ஜவ்வரிசி - கால் கப், 
சர்க்கரை - சுவைக்கேற்ப, 
நன்னாரி வேர் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) - 50 கிராம், 
தண்ணீர் - 3 கப்

நன்னாரி வேரை நன்கு கழுவி சுத்தம் செய்து 3 கப் தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் இதை அப்படியே கொதிக்க விடவும். இது சுண்டி ஒரு கப் ஆகும்வரை விட்டு இத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து தேன் மாதிரி வரும்போது இறக்கி வடித்து வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

பாலை சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி அத்துடன் ஜவ்வரிசியையும் சேர்த்து நல்ல கீர் பதம் (பாயசம் மாதிரி) வந்ததும் இறக்கி இந்த நன்னாரி ஜூஸை நல்ல வெள்ளைத் துணியில் வடித்து இந்த கீருடன் சேர்த்து குளிர வைத்துப் பரிமாறுங்கள். நன்னாரி வேர் வாசனையோடும், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு: இது ஒரு புதுவிதமான நன்னாரி கீர். கோடைக்காலத்திற்கு ஏற்றது. உடம்பையும், மனதையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். 

நன்னாரி பால்:

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் அளவு எடுத்து மையா அரைச்சு, 200 மில்லி பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா... 
மூலச்சூடு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் எல்லாமே இருந்த இடம் தெரியாம ஓடிப்போகும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... நரைச்ச முடிகூட கருகருனு மாறிடும்.

மருத்துவ குணங்கள்:

பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
 
 கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

Via FB ஆரோக்கியமான வாழ்வு