நாகை மாவட்ட திருமறைகாடு(வேதாரண்யம்) கோவில் வரலாறு ..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:35 | Best Blogger Tips
நாகை மாவட்ட திருமறைகாடு(வேதாரண்யம்)  கோவில் வரலாறு ..

இறைவர் திருப்பெயர்	: வேதாரண்யேஸ்வரர், மறைக்காட்டு மணாளர்
இறைவியார் திருப்பெயர்	: யாழைப்பழித்த மொழியாள்
தல மரம்		: வன்னி 
தீர்த்தம்			: வேத  தீர்த்தம், கடல்துறை, மணிகர்ணிகை, தேவபூஷணம்
வழிபட்டோர்		: வேதங்கள், இராமர், அகத்தியர், முசுகுந்த சக்கரவர்த்தி, 
			   
தல வரலாறு

    வேதங்கள் வழிபட்டதால், இப்பெயர் பெற்றது.

    அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.

    வேதங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை, அப்பரடிகள் திறப்பிக்கவும், ஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடியப் பெருமைப் பெற்றத் தலம்.

    இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்த தலமாதலால், இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகிறது.

    இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    முசுகுந்தச் சக்கரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகர் - புவனவிடங்கர்; நடனம் - ஹம்ச நடனம்; மேனி - மரகத் திருமேனி; ஆசனம் - இரத்தின சிம்மாசனம்). 

சிறப்புகள்

    திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதாரத் தலம். பரஞ்சோதி முனிவரே இக்கோவில் தலபுராணத்தை அருளிச் செய்துள்ளார்.

    சோழர், விஜயநகர அரசர் கால, கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. 

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இக்கோவில், திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இரயில்பாதையில் வேதாரண்யம் நிலையத்திலிருந்து மேற்கே 1- கி. மீ. தூரத்தில், உள்ளது. திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

நம்ப ஊரு நாகப்பட்டினம் - Nagapattinam