வேண்டுதல், பிராத்தனை, வழிபாடு என்பது ஒரு மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு. அந்த வகையில் சிவ வழிபாடு பற்றி பார்போம்.
முதலில் கொடி மரத்தை வணங்கி, பின் பலி பிடத்தை வணக்க வேண்டும். பலி பிடம் என்பது நந்தி தேவருக்கு பின் உள்ளது. இது அந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி யாரோ அவரின் பாத கமலனக்களை குறிக்கும் விதமாக தாமரை வடிவில் இருக்கும்.
இந்த பலி பிடம் பாசத்தை உணர்த்துகிறது. அதாவது மனித வாழ்வில் இயல்பான காம, குரோத, லோப, மோக, மத மாச்சரியங்களை பலி கொடுப்பதாக உறதி செய்து கொள்ள வேண்டும்.
நமது ஆணவம், அகங்காரம் பற்றுகளை பலி இட்ட பின்னரே தெய்வ சித்தி கிட்டும். கோவிலின் எட்டு மூலைகளிலும் அஷ்ட திக் பாலகர்களான இந்திரன் அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், எசாணன் முதலியவர்களுக்கு தலைமை பிடமாக இருப்பது பலி பிடமாகும்.
கொடி மரத்திற்கு அடுத்து பலி பிடத்தை வணங்கி நந்தி தேவரிடம் வருகிறோம்.
யார் இந்த நந்தி?
உத்தமமான முனிவர் கிலாதர். அவர் பத்தினி சித்ரவதி அம்மையார். இந்த முனி தம்பதியரின் தவப்பயனால் கைலைநாதன் ஸ்ரீ சைலம் போக என்று அன்பு கட்டளை இட்டார்.
பரம்பொருளின் உத்தரவு படி ஸ்ரீ சைலம் வந்தார்கள். புத்திர பாக்கியம் வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள். கடும் தவம் புரிதார்கள்.
கருணை கடலான சிவபெருமான் அருளால் சூரியனை போன்ற பிரகாசமான மகன் பிறந்தான். அன்னை சிதிரவதி அம்மையார் பாசத்தை பொழிந்து மகனை சீராட்டி தாலாட்டி வளர்த்தார். சகல கலைகளையும் தந்தை கிலாதர முனிவர் கற்பித்தார்.
வளர்ந்து வாலிபத்தை தொட்டார் நந்தி. எல்லா தாயாருக்கும் உள்ள கவலை சித்ரவதிக்கும் வந்தது. பருவத்தே திருமணம் செய்ய ஆசை பட்டாள். ஆனால் நந்தி பகவானோ தவ கோலம் பூண்டார்.
பெற்று வளர்த்து சீராட்டி பாராட்டி வளர்த்த தாய் தந்தையரை வணங்கி.... என்னை ஆசிர்வதியுங்கள். நான் பரம் பொருளை காண கடும் தவம் செய்ய போகிறேன் என்றார் ரிஷி குமாரன் நந்தி.
காலம் போடும் கணக்கை புரிந்து கொண்ட முனி தம்பதிகள் ஆசிர்வதித்தார்கள். எல்லா வளமும் பெற்று மங்கலம் பெருகுக என்று வாழ்த்தினார்கள்.
விடை பெற்ற நந்தி அக்கினியில் பல ஆண்டுகள் நின்று கொண்டே தவம் செய்தார். மெய் வருத்த செய்த தவத்தின் பயனாக பரமேஸ்வரன் நேரில் வந்தார்.
மகனே... எனது ஆணை எங்கும் நிறைத்தது. அதுபோல் இன்று முதல் உனது அதிகாரமும் எங்கும் நடக்கும். அதனால் அதிகார நந்தி என்று சொல்லபடுவாய் என்று ஆசிகள் கூறினார்.
நந்தி தேவன் அதிகார நந்தி என்று பெயர் பெற்ற பின்னாலும் கடும் தவம் செய்தார். அந்த தவத்தின் பயனாக மீண்டும் வரங்கள் தந்தார்.
அனைத்து பூதங்களுக்கும் உன்னை தலைவனாக ஆக்குகிறேன். சிவ ஞானத்தை உலகிற்கு போதிக்கும் ஆசிரியனும் நீ. எனக்கு வாகனமாகவும், கைலயில் காவல் தெய்வமாகவும் நீயே இருப்பாய். அதனால் என்னை போலவே நீயும் நித்தியனாக இருப்பாய் என்று வரமளித்தார்.
நந்தி சைவர்களுக்கு குரு. நந்தி என்றாலே எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பார் இருப்பவர் என்று பொருள். இவரின் அனுமதி பெறாமல் சிவ தரிசனம் செய்வது தவறு. அப்படி வணக்கினால் சிவனருள் கிட்டாது.
பொதுவாக சிவ ஆலையத்தில் நந்தி தேவர் எப்பொதும்சிவனை துதித்து வணங்கியபடியே இருப்பதால், சிவனுக்கும் நந்திக்கும் இடையே செல்வதை தவிர்க்க வேண்டும். நந்தி தேவர் வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்வதே பிரதானமாக இருக்கிறது.
திரயோதசி அன்று மாலை சூரிய அஸ்த மனத்திருக்கு முன்னதாக ஒன்னரை மணி நேரம் பிரதோஷ காலமாக கருதபடுகிறது. அந்த நேரத்தில் தான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே, அண்டத்தின் மீது நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார்.
இவ்வேளையில் உலகில் உள்ள அனைத்து சீவன்களும் சிவபெருமானுக்குள் ஒடுங்கி விடுவதாக புராணம் சொல்கிறது. பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும் சிவனையும் துதிப்பது 1000 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
கல்வி, செல்வ வளம் பெற்று, கடன் தொல்லை, வறுமை, மனக்கவலை நீங்கி குறிப்பாக மரணபயம் அற்று வாழ பிரதோஷ வழிபாடு சிறப்பு. நந்தி தேவர் மந்திரம்.
தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமைகி
தன்னோ நந்தி பிரசோதயாத்
நந்தி தேவரை வணங்கி அனுமதி பெற்று சிவதரிசனம் செய்த பிறகு சண்டிகேசுவறரை வணங்க வேண்டும்.
யார் இந்த சண்டிகேசுவரர்?
இவர் ஒரு சிவனடியார். சிவ சன்னதியில் சிறு இடைவெளி விட்டு இடது புறத்தில் சிறிய ஆலயம் அமைக்க பட்டிருக்கும். இவருக்குயென தனியாக மாலையோ நெய்வேதியமோ கிடையாது.
மூலஸ்சாணத்தில் சார்த்திய மாலையும், மிதமுள்ள நெய்வேத்தியமும் தான் இவருக்கு உரியது.
எப்போதுமே தவ நிலையில் இருந்து சிவ பெருமையை நெஞ்சுருக பிரதித்து கொண்டிருப்பார். அவரை வணக்கும் பொது சிவனருள் பரிபோரனமாக கிடைக்க வேண்டும் என்று இவரிடம் கேட்க வேண்டும்.
பின் கோவில் பிரகாரத்தை மூன்று மமுறை சுற்றி கொடி மரத்திருக்கு முன்னாள் நமஸ்காரம் செய்தால் சிவதரிசனம் நிறைவு பெறுகிறது.