
மேலோகத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்கள், தங்களின் உடலை மறைக்க, அத்திமர இலைகளை ஆடையாகப் பயன்படுத்தினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்து மதத்தில் அத்தி மரத்தைக் கடவுளுடன் சேர்த்து பூஜை செய்யப்படுவதை இன்றும் காண முடிகிறது. வெள்ளிக் கிரகத்தை வணங்க அத்தி மரத்தையும் பயன்படுத்துகின்றனார்கள்.
இதைப் பற்றி ஹோமரின் காவியம் பேசுகிறது. புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது.
உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப்பிஞ்சு - கோளி எனப்படும் தாவரவியல் இதனை ‘ரிசப்டகிள்’ என்று கூறுவர்.
அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப்பூக்களில் ஆண் மலட்டுப்பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
அத்திக்காய் உடம்பு சூட்டுக்கு மிகவும் நல்லது. இதனையும், பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நலம். முற்றின காயாக இருந்தால் மலத்தைப் போக்கும். ஆனால் பிஞ்சுக் காயாக இருந்தால் மலத்தை கட்டி விடும்.
இதனால் மேகம், வாதம், உடல் வெப்பம், புண் ஆகியவை போகும். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. சில நேரங்களில் புதினாக் கீரையை இதனுடன் சேர்த்து சமைக்கும் வழக்கமும் இருக்கிறது.
இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூல வாயு, மூலக் கிராணி, ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.
பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது.
மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து.
முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.
*சீமை அத்திப்பழம்* மூட்டு வலியைப் போக்கி ரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது.
தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.
சித்த மருத்துவம் மூலிகை:
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
அத்திப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
காய்ந்த அத்திப் பழம்– (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3,
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் – ஒரு கப்.
செய்முறை:
அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.