சுவை மிகு ராகி அதிரசம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:42 | Best Blogger Tips
இந்த வருட தீபாவளிக்கு:

தீபாவளி வந்து விட்டால் பலகாரம் என்ன செய்வது என்ற திணறலும் கூடவே வந்து நிற்கும். நம்முடைய அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் எல்லாம் சில நாட்களுக்கு முன்பாகவே பலகாரங்களை தயார் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள். நாமெல்லாம் குட்டிப் பையன்களாக அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து ஆர்வத்தோடு பார்த்து ரசிப்போம். 

சுட்டு அடுக்கும்போது நைசாக இரண்டைத் தூக்கிக் கொண்டு ஓடவும் செய்வோம். ஆனால் இன்று அபார்ட்மென்ட் காலம். ஏதாவது வேண்டும் என்றால் பைசா கொடுத்து வாங்கி என்ஜாய் பண்ணப் பழகி விட்டோம். உட்கார்ந்து ஆற அமர பலகாரம் சுடுவதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை, இன்டரஸ்ட்டும் குறைந்து போய் விட்டது. இருந்தாலும், தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான். இந்த தீபாவளிக்கு படு சுவாரஸ்யமான அதிரசம் செய்து சாப்பிடுங்களேன்.

சுவை மிகு ராகி அதிரசம்:

அதிரசம் பொதுவாக அரிசி மாவில் தான் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக கேழ்வரகு மாவில் அதிரசம் செய்யலாமே

தேவையானவை
கேழ்வரகு மாவு--- 1கப்
வெல்லம் ---1 12 கப்
நெய் ---2 ஸ்பூன்
ஏலப்பொடி சிறிது
எண்ணெய் பொரிப்பதற்கு

step--1வெல்லத்தை தூளாக்கி, தண்ணீரில் கரைத்து மண் இல்லாமல் வடிகட்டவும். 
step --2 அதை பாகு போல் காய்ச்சவும். உருட்டினால் உருண்டு வர வேண்டும் .அது தான் பாகிற்கான பதம்.

step---3 அடுப்பை அணைத்து விட்டு .அதோடு, கேழ்வரகு மாவை போட்டு 
கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.
step--4 மாவு இளஞ்சூடாக இருக்கும் போது நெய் சேர்த்து நன்கு பிசைந்து ,சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணையில் பொரிக்கவும்.
step --5 சுவையான, சத்தான கேழ்வரகு அதிரசம் சாப்பிட தயார்.
நன்றி: krishnan - natue - blogspot

step --5 சுவையான, சத்தான கேழ்வரகு அதிரசம் சாப்பிட தயார்..

நன்றி: krishnan - natue - blogspot