காளானை இந்த முறையில் செய்யும் போது கூடுதல் ருசியாக இருக்கும். மிளகு காரம் உடலுக்கு நல்லது.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் தேவையான அளவு
கடுகு, , பெருஞ்சீரகம் கருவேப்பிலை
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு தேவையான அளவு
இந்த செய்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை
செய்முறை:
கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளான்-ஐ நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் வேலை முடிந்தது !!!!
குறிப்பு :
தயிர் சாதம், லெமன் சாதம், சப்பாத்தி இவற்றுடன் மிக நன்றாக இருக்கும்.