எப்படிப்பட்ட தருணங்களில் புதிய வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும்
பலவீனமான சிஐபிஐஎல் ஸ்கோர்
புதிய வீடு வாங்குபவருக்கு, வீட்டுக் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி ஒரு மிகப் பெரிய சுமையாகும். பலவீனமான சிஐபிஐஎல் என்றால், வீட்டுக் கடனுக்கு வசூலிக்கப்படும் அதிகமான வட்டி விகிதமாகும். எனவே சிஐபிஐஎல் பலவீனமாக இருந்தால், வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் ஒவ்வொரு மாத இஎம்ஐ அதிகமாக இருக்கும். பொதுவாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் பலவீனமான சிஐபிஐஎல் ஸ்கோரோடு வீட்டுக் கடனை வழங்குவதில்லை. ஒரு வேளை ஒருவர் பலவீனமான சிஐபிஐஎல்லோடு வீட்டுக் கடனை வாங்கிவிட்டால், அவர் அதைத் திருப்பிச் செலுத்துவதில் அதிக சிரமமாக இருக்கும். எனவே சிஐபிஐஎல் ஸ்கோர் பலவீனமாக இருக்கும் போது வீட்டுக் கடனுக்கு நோ சொல்லிவிட வேண்டும்.
போதுமான வருமானமின்மை
போதுமான வருமானம் இல்லாமல் வீட்டுக் கடன் வாங்குவது மிகப் பெரிய தவறாகும். ஏனெனில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவது மிகப் பெரிய சுமையாகிவிடும். பெரும்பாலான நேரங்களில் வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் இருந்து வரும் வாடகைப் பணத்தை வைத்து வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்திவிடலாம் என்று நினைத்து பலரும் போதுமான வருமானம் இல்லாமல் வீட்டுக் கடன் வாங்குகின்றனர். ஆனால் அவர்களின் இந்த திட்டம் நிறைவேறவில்லை என்றால் அவர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். எனவே போதுமான வருமானம் இல்லையென்றால், வீட்டுக் கடனுக்கு நோ சொல்லிவிட வேண்டும்.
இடம் மிது சந்தேகம் இருக்கும்போது
நாம் வாங்க நினைக்கும் வீட்டின் இடம் மீது சந்தேகம் இருந்தால் அந்த வீட்டை வாங்கி அங்கு சிறிது காலம் தங்கி இருப்பதைவிட, அந்த வீட்டை வாங்காமல் தவிர்த்துவிட வேண்டும். இந்த நேரத்தில் வீட்டை விற்பவர் அதிகமான விலைக்கு அந்த வீட்டை உங்களுக்கு விற்றுவிடுவார். மேலும் சிறிது காலம் அந்த வீட்டில் இருந்துவிட்டு வேறு வீட்டிற்கு மாற்றிச் செல்வதும் மிகவும சிரமமாக இருக்கும்.
ரியல் எஸ்டேட் வர்த்தகம் சரியும்போது
பொருளாதாரத்தில் மந்தம் இருக்கும் போதும், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் சரிவு இருக்கும் போதும் அந்த துறையில் முதலீடு செய்யமால் இருப்பது நல்லது. இந்த நேரங்களில் வீடு கட்டுபவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவர். அதனால் கட்டிய வீடுகளை வீடு வாங்குபவரிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே ரியல் எஸ்டேட் வர்த்தகம் சீரான நிலையில் இருக்கும்போது வீடு வாங்குவது நல்லது.
Thanks to Thatstamil.com