மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று
அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி
என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.
மல வாசலில் நல்ல இரத்தத்தைக்
கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள்
இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம்
மூல நோயாக இடம் பெறுகிறது.
மூல
நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி
இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும்
வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன
குறிப்பிடப்படுகின்றன.
1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம்
அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத்
தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் “வயது போக, வயிறு பெருக்க, மூலம்
புறப்பட” என்ற சூத்திரம் இருக்கிறது.
2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.
3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.
4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.
5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.
6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது
வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல
நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.
7. கர்ப்பிணிகளுக்கு
வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை
முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில
நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.
மூலவியாதி வருவதைத்
தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல்
வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற
வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம்
கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத்
தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.
வயதானவர்களுக்கு மூல இரத்தக்
குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை
முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம்
இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் கட்டம்
பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு
மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும்
போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை
அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில்
முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன்
படுத்தலாம்.
மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.
மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.
மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் “வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட” என்ற சூத்திரம் இருக்கிறது.
2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.
3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.
4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.
5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.
6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.
7. கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.
மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.
வயதானவர்களுக்கு மூல இரத்தக் குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம் இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் கட்டம் பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும் போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில் முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன் படுத்தலாம்.