தழும்புகள் மறைய வேண்டுமா???

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips


நிறைய பெண்கள் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.

இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது. ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.

* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

* ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.