பெண்களுக்கான எளிய உடற்பயிற்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:03 | Best Blogger Tips

பெண்களை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பிரச்சனையாக தலை காட்டும். சிலருக்கு உடல் எடை கூடும்.

குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து பெரிதாகி விடும். வயிற்றைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஓயாத வேலைகளுக்கு நடுவே உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். இடை எடையையும் குறைக்க முடியும்.

தரையில் நேராகப்படுக்கவும். இரண்டு கால்களையும் படத்தில் காட்டி இருப்பது போல் மடக்கவும். இரு கைகளையும் தலைக்கு அடியில் பக்கபலமாக வைத்தபடி படத்தில் காட்டியபடி தலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்துங்கள். தலையை உயர்த்தும் போது மேல் வயிற்றில் அழுத்தம் ஏற்படும். இப்படிப் பத்து முறை செய்ய வேண்டும். பலன்….தினமும் இந்தப்பயிற்சியைச் செய்தால் தொப்பை குறையும்.

தரையில் நேராகப்படுக்கவும். கைகளை இடுப்புக்கு அப்புறம் வைத்தபடி கால்களை படத்தில் காட்டியபடி எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ இந்த அளவுக்கு உயர்த்தவும். இந்நிலையில் அடிவயிற்றை உள்ளிழுத்து சில நொடிகள் அப்படியே இருக்கவும். பின் கால்களைக் கீழே இறக்கவும். இதே போல் தினசரி பத்து முறை செய்ய வேண்டும். பலன்… இந்த பயிற்சி இடுப்புப் பகுதியில் உள்ள தேவைற்ற கொழுப்பு குறையும்.