அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:54 AM | Best Blogger Tips
 
 
how changing your style can change your life
 
 
 
ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடுவது என்பது அவர்களின் உடையை வைத்து தான். பின்பு தான், அவரிடம் பேசும் பொழுது அவருடைய எண்ணங்களையும், குணாதியசங்களையும் கண்டறிய முடியும். ஒருவரின் தோற்றம் பார்ப்பவர்களை ஈர்க்கத்தக்கதாய் அமைத்தல் முதல் விஷயம். ஒரு அழகான ஆண்மகன் தளர்வான சட்டையை மற்றும் கால்சட்டையை அணிந்தால் பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. இது இளமை துள்ளும் வாலிபருக்கு மட்டுமின்றி, அனைத்து வயதினருக்கும் பொருந்தும். ஆகவே அன்றாட வாழ்க்கையில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறோம் என்பது முதன்மையான விஷயம். அழகான பொருத்தமான உடையை அணிதலால், நமக்குள் தன்னம்பிக்கை வளர்ந்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். மேலும் மனதில் எந்த ஒரு தளர்ச்சியுமின்றி வாழ துணை புரியும். எனவே, அதற்கு எந்த வகையான உடைகளை அணியலாம், அது எத்தகையவாறு இருக்க வேண்டும் என்று இங்கே சில டிப்ஸ் உள்ளன. அதனை பின்பற்றி பயனடையுங்கள். how changing your style can change your life * நன்கு பொருத்தமான ஆடைகள் மற்றும் சரியான வடிவம், ஆளுமையை அதிகரிக்கும். பெரும்பாலும் மக்கள், விலையுயர்ந்த ஆடைகள் மட்டுமே நன்கு பிரதிபலிக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது கட்டமைப்பு மற்றும் உடல் வகையை பொருத்தது. இதற்கு பணம் ஒரு விஷயம் அல்ல. * உடுத்தும் ஆடையானது நன்கு சுத்தமாக, இஸ்திரி போட்டு, சீராக இருந்தால், விலையுயர்ந்த ஆடை கூட தோற்றுப் போய்விடும். மேலும் தொடர்ந்து ஒரே ஆடையை அணிவதை தவிர்ப்பது நல்லது. என்ன செய்வது வெளியுலகத்திற்காக சிலசமயம் சரிசெய்து கொள்வது சகஜம் தானே. * எத்தகைய உடையை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அதற்கு தகுந்த உடம்பு இருத்தல் அவசியம். அழகான உடல் அமைப்பு இருந்து, நல்ல ஆடைகளை அணிதலால் காண்பவருக்கு சிறந்த பிரதிபலிப்பு ஏற்படும். எனவே, தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வைத்திருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம்மையும், உள் உணர்வுகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். * ஒரு நல்ல கைக்கடிகாரம், கருப்பு கண்ணாடிகள் போன்றவற்றை அணிவது, தோற்றத்திற்கு கூடுதல் அழகைத் தரும். மேலும் இத்தகையவற்றை அணியும் ஆடைக்கு ஏற்றவாறு அணிவது அவசியம். குறிப்பாக, காலத்திற்கு ஏற்ப உடை அணிதல், தோற்றத்தை இன்னும் உயர்த்திக் காட்டும். எடுத்துக்காட்டாக, குளிர் காலத்தில் ஒரு நல்ல ஜெர்கின், ஜாக்கெட் அணிதல், வெயில் காலங்களில் சன் கிளாஸ் அணிவது என காலத்துக்கு ஏற்றவாறு அணியவும். இதனால் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் கண்கள் ஏங்கும். இங்கு குறிப்பிட்டுள்ள சில யோசனைகள் சிறியது தான். ஆனால் இதை சரியாக கடைப்பிடித்தால், அது பெரிய மாற்றத்தை உருவாக்கும். எனவே, இந்த நுட்பமான விஷயங்களை கவனித்து வந்தால், பார்ப்பவர்களின் மனதில் உங்களின் முகமானது நன்கு பதிவாகிவிடும் என்பதே இதன் ரகசியம். எனவே, உடை பாணியை மாற்றி வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை பெற்று, சந்தோஷமாக வாழுங்கள்.