ஹிந்து மதத்தில் அக்னிக்கு அதிகப்படியான முன்னுறிமை கொடுப்பது ஏன்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:53 PM | Best Blogger Tips

நண்பரின் கேள்வி,
நம் ஹிந்து மதத்தில் அக்னிக்கு அதிகப்படியான முன்னுறிமை கொடுப்பது ஏன் கொஞ்சம் விளக்குங்கள் ?

சனாதன தர்மத்தின் மிகப் பழமையானது என்று வேற்று மத அறிஞர்களே ஒத்துக் கொள்ளும் "ரிக் வேதம்" அக்னியை துதித்தே தொடங்குகிறது.

"
அக்னியே, உயர்ந்த புரோகிதரே, வேள்வியின் தலைவனே" என்று தொடங்குகிறது. மற்ற தேவர்களை விட ரிக் வேதத்தில் அக்னியே அதிகம் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஸ்லோகங்கள் அக்னிக்கு மட்டுமே உள்ளதாய் சொல்கிறார்கள்.

அக்னி பிரம்ம தேவனின் தலை புத்திரன். அக்னி சக்தியின் ஆதாரம். அவர் எப்போது இளமையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. (அக்னி குஞ்சொன்று கண்டேன், அதை அங்கிலோர் காட்டிலோர் பொந்தினில் வைத்தேன், வெந்து தனிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ? என்றானே மஹாகவி)

அக்னியை ருத்ரனின் ஸ்வரூபம் என்றும் சொல்வர். நந்திதேவர் அக்னியை குறிக்கிறார் என்பது ஐதீகம். அக்னி பார்பட்சம் இல்லாதது. பரம சிவனின் மூன்றாவது கண்ணாகிய "த்ரயம்பகத்தை" குறிக்கிறது. மோகத்தை குறிக்கும் மன்மதனை எரிப்பதால், அது நம் ஆசைகளையும் அழித்து இறைவன்பால் விழிப்புணர்வை பெருக்கக் கூடியது.

அக்னி நம் ஒவ்வொருவரின் ஆதாரமாய் இருக்கிறது. நம்முள் உயிர் சக்தியாக, நம் உணவை செரிமானமாக்க என நம் உள்ளேயும் இருக்கிறது. சூரியன் உட்பட எண்ணிலடங்காத நட்சத்திரங்களின் ஆதாரமாயும் இருக்கிறது.

ஐன்ஸ்டியன் சொன்னது போல் சக்தியை ஆக்கவும், அழிக்கவும் முடியாதல்லவா ? " (Energy cannot be created or destroyed) உன்னால் எதையும் படைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது" என்கிறது கீதை.

வேள்வியில் வரும் தீயில் இருப்பது மட்டும் அக்னி அல்ல. தவம் இருக்கும் யோகிகளின் ஒருங்கினைக்கப்பட்ட எண்ணமும் அக்னிதான். அக்னி எனபது இறை சக்தி, ஏன் இறைவனேதான். இறைவனை துதிக்க அக்னியை விட சிறந்த தூதுவன் இல்லை.

சிறிய உதாரணம். நாம் கணினியில் உள்ள கணினி மொழிகளை ஒப்பிட்டோமென்றால், அதில் சில கணினி மொழிகள் மென்பொருளோடும் (Software), சில கணிணி மொழிகள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடும் (Operating system) தொடர்பு கொள்ளும். ஆனால் சில வகையோ நேராக இயந்திரத்தின் அடிப்படை மொழியோடு (Machine language) தொடர்பு கொள்ளும் அல்லவா. அப்படி பட்டது தான் அக்னி. அது இறைவனின் ஸ்வருபமாய் விளங்குகிறது.

"
தமஸோமா ஜ்யோதிர்கமய" என்று வேதாந்தம் சொல்லுகிறது அல்லவா. அதாவது " இருளிலிருந்து எங்களை ஒளியை நோக்கி வழிநடத்துங்கள்" என்று, அந்த ஒளி என்னும் விழிப்புணர்வுதான் அக்னி. அதனால்தான் அக்னியை ஒவ்வொரு தினமும் வீடுகளில் ஏற்றப்படுகின்றன, முன்னுரிமை தரப்படுகின்றன‌.

-Enlightened Master
நண்பரின் கேள்வி, 
நம் ஹிந்து மதத்தில் அக்னிக்கு அதிகப்படியான முன்னுறிமை கொடுப்பது ஏன் கொஞ்சம் விளக்குங்கள் ?

சனாதன தர்மத்தின் மிகப் பழமையானது என்று வேற்று மத அறிஞர்களே ஒத்துக் கொள்ளும் "ரிக் வேதம்" அக்னியை துதித்தே தொடங்குகிறது.

 "ஓ அக்னியே, உயர்ந்த புரோகிதரே, வேள்வியின் தலைவனே" என்று தொடங்குகிறது. மற்ற தேவர்களை விட ரிக் வேதத்தில் அக்னியே அதிகம் அழைக்க‌ப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஸ்லோகங்கள் அக்னிக்கு மட்டுமே உள்ளதாய் சொல்கிறார்கள்.

அக்னி பிரம்ம தேவனின் தலை புத்திரன். அக்னி சக்தியின் ஆதாரம். அவர் எப்போது இளமையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. (அக்னி குஞ்சொன்று கண்டேன், அதை அங்கிலோர் காட்டிலோர் பொந்தினில் வைத்தேன், வெந்து தனிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ? என்றானே மஹாகவி)

அக்னியை ருத்ரனின் ஸ்வரூபம் என்றும் சொல்வர். நந்திதேவர் அக்னியை குறிக்கிறார் என்பது ஐதீகம். அக்னி பார்பட்சம் இல்லாதது. பரம சிவனின் மூன்றாவது கண்ணாகிய "த்ரயம்பகத்தை" குறிக்கிறது. மோகத்தை குறிக்கும் மன்மதனை எரிப்பதால், அது நம் ஆசைகளையும் அழித்து இறைவன்பால் விழிப்புணர்வை பெருக்கக் கூடியது. 

அக்னி நம் ஒவ்வொருவரின் ஆதாரமாய் இருக்கிறது. நம்முள் உயிர் சக்தியாக, நம் உணவை செரிமானமாக்க என நம் உள்ளேயும் இருக்கிறது. சூரியன் உட்பட எண்ணிலடங்காத நட்சத்திரங்களின் ஆதாரமாயும் இருக்கிறது. 

ஐன்ஸ்டியன் சொன்னது போல் சக்தியை ஆக்கவும், அழிக்கவும் முடியாதல்லவா ? " (Energy cannot be created or destroyed) உன்னால் எதையும் படைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது" என்கிறது கீதை. 

வேள்வியில் வரும் தீயில் இருப்பது மட்டும் அக்னி அல்ல. தவம் இருக்கும் யோகிகளின் ஒருங்கினைக்கப்பட்ட எண்ணமும் அக்னிதான். அக்னி எனபது இறை சக்தி, ஏன் இறைவனேதான். இறைவனை துதிக்க அக்னியை விட சிறந்த தூதுவன் இல்லை. 

சிறிய உதாரணம். நாம் கணினியில் உள்ள கணினி மொழிகளை ஒப்பிட்டோமென்றால், அதில் சில கணினி மொழிகள் மென்பொருளோடும் (Software), சில கணிணி மொழிகள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடும் (Operating system) தொடர்பு கொள்ளும். ஆனால் சில வகையோ நேராக இயந்திரத்தின் அடிப்படை மொழியோடு (Machine language) தொடர்பு கொள்ளும் அல்லவா. அப்படி பட்டது தான் அக்னி. அது இறைவனின் ஸ்வருபமாய் விளங்குகிறது. 

"தமஸோமா ஜ்யோதிர்கமய" என்று வேதாந்தம் சொல்லுகிறது அல்லவா. அதாவது " இருளிலிருந்து எங்களை ஒளியை நோக்கி வழிநடத்துங்கள்" என்று, அந்த ஒளி என்னும் விழிப்புணர்வுதான் அக்னி. அதனால்தான் அக்னியை ஒவ்வொரு தினமும் வீடுகளில் ஏற்றப்படுகின்றன, முன்னுரிமை தரப்படுகின்றன‌.

-Enlightened Master