ஆண்கள் குடிபோதையில் செய்யும் விஷயங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:21 PM | Best Blogger Tips
இந்த உலகில் நிறைய பேர் ஆல்கஹாலை மருந்தாக சாப்பிடுகின்றனர். தினமும் ஒரு பெக் சாப்பிட்டால், மன அழுத்தம் நீங்குவதோடு, நல்ல உறக்கமும் வரும். ஆனால் இளைஞர்கள் பலர் இதனை அதிகமாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குடித்துவிட்டு, பல பிரச்சனைகளை செய்வார்கள். அவ்வாறு அவர்கள் குடித்தப் பின்பு செய்யும் செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆண்கள் மது அருந்தினால் செய்யும் செயல்கள்!!!
* ஆண்கள் குடித்துவிட்டால், செய்யும் விஷயத்தில் ஒன்று தான் முட்டாள்தனமாக பேசுவது. அவ்வாறு பேசுவதில் எந்த ஒரு விஷயமும் இருக்காது. ஏனெனில் ஆல்கஹாலில் உள்ள போதையை ஏற்படுத்தும் பொருள் மூளையில் சென்று, ஏதேதோ முட்டாள்தனமாக பேச வைக்கும்.
* சிலர் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது போன்று செய்வார்கள். அதிலும் சாதாரணமான நடனமாக இருக்காது, குத்துப்பாட்டு தான். மேலும் அப்போது சாதாரணமாக இருக்கும் போது பார்க்கும் கௌரவம், ஒழுக்கம் போன்றவை அனைத்தும் காற்றாய் பறந்து போயிருக்கும். சில நேரங்களில் அசிங்கமாக கூட பேசுவார்கள், திட்டுவார்கள்.
* காதல் தோல்வி அடைந்தவர்களாக இருந்தால், குடித்தப் பின்பு அந்த காதலிக்கு போன் செய்து, அவர்களிடம் புலம்புவார்கள். ஒரு வேளை மிகவும் கோபத்துடன் இருந்தால், அவர்களுக்கு போன் செய்து, தங்கள் கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள்.
* மது அருந்தியப் பின் ஆண்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும் போது, அந்த டிவியில் ஏதேனும் அழுகை சீன் போனாலும், அதைப் பார்த்து தேம்பி தேம்பி அழுவார்கள். அப்போது அவர்களைப் பார்த்தால், சரியான சிரிப்பு தான் வரும்.
* மனம் கஷ்டமாக உள்ளது என்பதற்காக நண்பர்களுடன் வெளியே பார் சென்று குடிக்கும் போது, அந்த கஷ்டத்தை ஏற்படுத்தியவருக்கு (நிச்சயம் ஒரு பெண்ணாகத் தான் இருக்கும்), நண்பனின் போனை வாங்கி, பேச ட்ரை செய்யும் போது, போனை எடுக்காமல் இருந்தால், நண்பனின் மொபைல் என்று கூட பார்க்காமல் உடைத்துவிடுவார்கள். பின் அவனை அழைத்து வந்த நண்பன் "ஏன்டா இவனை அழைத்து வந்தோம்" என்று புலம்பும் வகையில் நடப்பார்கள்.
* சில நேரங்களில் குடித்துவிட்டு, இரகசியம் என்று மனதில் வைத்திருப்பதை யாரிடம் சொல்லக்கூடாதோ, அவர்களிடம் சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.
* ஆண்கள் பொதுவாக மது அருந்தினால் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள். சொல்லப்போனால், அவர்களது பாசம் மது அருந்தியப் பின் நன்கு தெரியும். பெண்கள் மட்டும் தான் உணர்ச்சிவயப்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் மது அருந்தினால், அப்போது தெரியும் அவர்கள் பெண்களை விட எவ்வளவு உணர்ச்சிவயப்பட்டவர்களென்று.
மேற்கூறியவையே மது அருந்தியப் பின் ஆண்கள் செய்யும் செயல்கள். என்ன நண்பர்களே! சரிதானே? சரி, நீங்கள் மது அருந்தினால் என்ன செய்வீர்கள் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்...