சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:51 | Best Blogger Tips


சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!


 அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்காக பல க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்ற பல செயல்களைச் செய்வோம். அதிலும் அவற்றை அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் செலவழித்து செய்வோம். எவ்வளவு தான் பணத்தை செலவழித்து முகத்தை அழகாக மாற்றினாலும், அவை நீண்ட நாட்கள் இருப்பதில்லை. சிலர் அதன் காரணத்தினால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை அடைய நேரிடுகிறது. எனவே அத்தகைய தோற்றத்தை விரைவில் பெறாமல் இருப்பதற்கு, இயற்கை வழிகளை மேற்கொள்வதே சிறந்தது.இயற்கை வழிகளில் ஒன்று தான் பழங்கள். பழங்களை நிறைய சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எதற்கு சொல்கின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் பழங்களை அதிகமாக சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் பொலிவாகும். அவ்வாறு பழங்களை சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு பயன்படுத்தினாலோ, சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும். இப்போது சருமத்திற்கு பொலிவைத் தரும் பழங்கள் என்னவென்று பார்ப்போமா!!!


ஆப்ரிகாட் ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனலி இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.



பப்பாளி முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், பப்பாளி பழம் அதற்கு ஒரு நல்ல பலனைடத தரும். ஏனெனில் பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்கிவிடும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவி வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுவதால், உடலானது அழுக்கின்றி இருக்கும். அதேப் போல் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே போல் அந்த ஆப்பிளை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து, அதனை முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் இந்த கலவையில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.



Light on மாதுளை நிறைய பேருக்கு மாதுளை பிடிக்காது. இதற்கு காரணம் அதனை உரித்து சாப்பிடும் வகையில் பொறுமை இல்லாததே ஆகும். ஆனால் சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் மாதுளை மிகவும் நல்லது. அதற்கு அத்தகைய மாதுளையின் விதையை அரைத்து, அத்துடன் வேண்டிய டோனரை சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கு, பின் அந்த கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து, பின் முகத்தில் தடவினால், முகமானது நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதனை கோடை காலத்தில் செய்தால், நன்றாக இருக்கும்.


ஆரஞ்சு சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பல வகையில் பயன்படுகிறது. அதிலும் அதன் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், பின்னர் அதன் முழு பலனும் தெரியும். மேலும் அவ்வாறு ஜூஸ் போட்டு குடித்தப் பின்னர், அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். ஏனெனில் அதன் தோலிலும் பல சருமத்திற்கான நன்மைகள் பல உள்ளன. அதிலும் ஆரஞ்சு பழத்தை உரித்ததும், அதன் தோலை உடனே முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகமானது குழந்தையின் முகத்தைப் போன்று பொலிவோடு அழகாகும். இதனை தினமும் செய்தால், சருமம் சூப்பராக இருக்கும்.