• அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips




அந்தக்கால சில அரசர்கள் எந்தப் பெண்ணை விரும்பினாலும்
அந்தப் பெண் அரசனுக்கு உடைமையாகி விடுவாள்..
முக்கியமாக
அந்தப்புரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அரசன்
தான் புருஷன்..
அரசனுக்குப் பின் தான் புருஷன்..
எனவே,
அரசனின் கடைக்கண் பார்வைபட்டால்
புருஷனிடம் வாழ்வதைவிட வசதியாக இருக்கலாம்..

ஆனால் எப்போதும் கிட்டத்தரசியாக இருக்க
முடியுமே தவிர பட்டத்தரசியாக
முடியாது அதுவும் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே..

சொல்லவரும் நேரடி உட்பொருளாக,
தன்னைத் தேடிவரும் வாய்ப்புகளை தவிர்த்து
எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புகளும் கை நழுவிப் போக,
மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நிற்கக்கூடிய
சூழலுக்கு சொல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது..


அறியாத விளக்கம்:

இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்..
அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும்
போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு
அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம்
பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள்
கண்டறிந்து உபதேசித்துள்ளனர்..
தவிர,
குழந்தைப்பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு..

அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள்
புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்..

இதையே,
அரச மரத்தை சுற்றிவிட்டு
அடிவயிறை தொட்டு பார்த்துக்
கொண்டாளாம்.. என்றும் பழமொழியாக சொல்வார்கள்..