முக அழகிற்கு ஏற்ற முக்குத்தி…..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:11 | Best Blogger Tips
முக அழகிற்கு ஏற்ற முக்குத்தி…..

முகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான மூக்கு அமைந்திருக்கும். மேக் அப் போடும்போது மூக்கு அழகை எடுத்துக்காட்டும் வகையில் மேக் அப் போடுவது கூடுதல் அழகை தரும் மூக்கு குத்திக்கொள்வது மூக்கு அழகையும், முக அழகையும் அதிகரிக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மூக்கு அழகை அவர்கள் கூறும் மூக்குத்தி டிப்ஸ் உங்களுக்காக
...
மூக்குத்தி குத்திய பெண்ணின் அழகு தனிதான். பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால் அவர்களின் அழகு மிளிர்கிறது என்பார்கள். மூக்குத்தி அணிகலன் மட்டுமல்ல உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.

பெண்களின் சக்தி

ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் என்கின்றனர் முன்னோர்கள். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக்கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.

ஆரோக்கியத்திற்கு நல்லது

மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி ஒற்றைத் தலைவலி மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் பார்வைக் கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்கள் மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.

அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான். தங்கம்தான் அணியவேண்டும். கவரிங் அணிவதால் எந்த பலனும் இல்லை என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். இன்றைக்கும் கிராமப் புறங்களில் மூக்கு குத்திய பெண்களை காணலாம்.

அகன்ற மூக்கு

அகன்ற மூக்கு உள்ளவர்களுக்கு 5 கல் கொண்ட வட்ட மூக்குத்தி அழகை அதிகரித்துக் காட்டும். பேசரியும், மிஸியம்மா மூக்குத்தி எனப்படும் அகலமான மூக்குத்தியும் எடுப்பாய் இருக்கும்.

நீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ள மூக்கினை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம்.

இவர்கள் சங்கு மூக்குத்தி, முத்து மூக்குத்தி போடுவதால் சப்பை மூக்கினை மாற்றிக்காட்டும்.

கூர்மையான நாசி கொண்டவர்கள் இடது மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி அணிவது முக அழகை அதிகரித்துக் காட்டும்.

முகத்திற்கு ஏற்ற மூக்குத்தி

கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும். சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும்.

மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும்.

குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.

இடது பக்கம்

இன்றைக்கு பேஷனுக்காக வலதுபக்கம் மூக்குத்தி அணிகின்றனர். அது தவறானது இடதுபக்கம்தான் மூக்குத்தி அணியவேண்டும் என்று சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.