ஏதாவது ஒன்று
உங்களிடமிருந்து
விலகிக்கொண்டாலோ,
விலக்கி கொண்டாலோ
"அதை விடச் சிறந்த ஒன்றை
காலம் கொடுத்தே தீரும்"
என்பதை மட்டும் உறுதியோடு நம்புங்கள்...
ஒன்று அதை முழுவதாய் மறக்க வைக்கும்;
இல்லையெனில்
மற்றொன்றை கொடுத்து பழையதை மறக்கடிக்க வைக்கும்;
வாழ்வில் எதை இழந்தாலும்
அதற்கு பதிலீடாக,
மாற்றாக,
அதற்கு ஒப்பாக,
அதற்கு ஈடாக,
அதற்கு சற்றும் குறைவில்லாத
ஒரு புது வாழ்வு நிச்சயமாக வரும்....!
அதுதான் உலக நியதி;
நம்பிக்கையோடு காத்திருங்கள்....!!
துரோகம் வலிக்கும்,
துரோகத்தின் வலி
உயிரை இரண்டாக கிழிக்கும்.
அதற்காக பழிவாங்க வேண்டும்
என்ற எண்ணத்தோடு மட்டும் இருக்காதீர்கள்.
அது உங்கள் நிம்மதியைதான் தொலைக்கும்.
காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும்,
அதுவரை பார்த்துக் கொண்டிருங்கள், போதும்.
பல நீண்ட நெடிய இரவுகள்
தூக்கத்தை தொலைத்த இரவுகள்
நிம்மதியிழந்த இரவுகள்
காதலை பிரிந்து வாழ்ந்த இரவுகள்
இதயத்தை பிழிந்த இரவுகள்
அத்தனை இரவுகளும்
ஒரு நாள் விடியும்.
யாரும் அறியாத
யாரும் பார்த்திராத
சோக இழைகள் எல்லாம்
ஒரு நாள் புன்னகையாக மாறும்,
நிம்மதியாக மாறும்,
நம்பிக்கையோடு காத்திருங்கள்...!!!
காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது...!
ஆனால்
காலம் அனைத்திற்கும் ஒருநாள் பதில் சொல்லும்...!
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏