பெண் கல்வியின் முக்கியத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:58 PM | Best Blogger Tips

May be a doodle of 1 person and child

 

பிள்ளைகள் பெண்ணாய்

பிறந்து விட்டதே

 

தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும்

நிலம் வாங்கி சேர்க்க வேண்டும்

 

செலவை குறைத்து

 

சேமித்த பணத்தை

வங்கியில் சேர்கனும் என்று

ஏங்கித் தவிக்காதீர்கள்

 

தூக்கம் மறந்து துவழாதீர்கள்

துக்கம் கொள்ளாதீர்கள்

 

நீங்கள் ஆற்ற வேண்டியது

ஒன்றே ஒன்று தான்

பெண் பிள்ளைகளுக்கு

நல்ல கல்வியைக் கொடுங்கள்

 

தாலி கட்டினவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது

role of female education in our society | பெண் கல்வியின் சிறப்பு 

எதையும் எதிர்த்து

ஏறி மிதித்து வாவென்று

தன்னம்பிக்கையை கொடுங்கள்

 

விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள்

 

இசை பயில நடனம் பயில

தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால்

அதற்கான வழிகளை செய்து கொடுங்கள்

இன்னொரு வீடு

 

இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று

சமையல் பழக்குவதை விடவும்

 

சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும்

தையல் பழக்குவதை விடவும்

 

பிரச்சனைகளின் போது

எப்படி மீள வேண்டும்

 

பிரிவுகளின் போது

தனித்து எப்படி வாழ வேண்டுமென்று

 

தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள்

அதட்ட வேண்டிய நேரம்

 

அதட்டி வளவுங்கள்

தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம்

 

தட்டிக் கொடுங்கள்

பெண்ணுக்கு அறிவை விடவும்

 

தங்கமோ நிலமோ பெரியதில்லை

படிப்பிருந்தால்

 

தங்கமும் நிலமும் பணமும்

தானாய் வந்து கதவு தட்டும்

 

உங்கள் வளர்ச்சியைக் கண்டு

உலகம் கைகள் தட்டும்

 

சிறப்புடன் வாழ

சிரிப்புடன் வாழ வைப்போம்.......

 

பெண் கல்வி என்பது பெண்களுக்கு கல்வி பெறுவதற்கான உரிமை மற்றும் வாய்ப்பு பற்றியது. இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது

 

படித்த பெண்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும்

 

பெண் கல்வியின் முக்கியத்துவம்:

தனிப்பட்ட வளர்ச்சி:

கல்வி பெண்களின் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துகிறது, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கிறது

 

பொருளாதார மேம்பாடு:

படித்த பெண்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இது அவர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கவும் பொருளாதார சுதந்திரத்தை அடையவும் உதவுகிறது

 

சமூக முன்னேற்றம்:

பெண் கல்வி சமூகத்தில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக வாதிடவும், சமூகத்தில் பங்கேற்கவும் உதவுகிறது

 

குடும்ப நல்வாழ்வு:

படித்த பெண்கள் தங்கள் குடும்பங்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், இது ஒட்டுமொத்த குடும்பத்தின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது

 

பெண் கல்வியின் தடைகள்:

சமூக மற்றும் கலாச்சார தடைகள்: சில சமூகங்களில், பெண்கள் கல்வி கற்பதற்கு எதிரான மனப்பான்மை உள்ளது, மேலும் பெண் கல்விக்கான அணுகல் குறைவாக உள்ளது

 

வறுமை: வறுமையின் காரணமாக, பல பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

 

பாலினப் பாகுபாடு:

பள்ளிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை பெண் கல்வியை பாதிக்கும் காரணிகளாக உள்ளன

 

பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான வழிகள்:

 

பெண் கல்விக்கான விழிப்புணர்வை

  ஏற்படுத்துதல், பெண் கல்விக்கான அணுகலை அதிகரித்தல், பெண் கல்விக்கான நிதி உதவிகளை வழங்குதல், பாலினப் பாகுபாட்டைக் குறைத்தல், பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய கற்றல் சூழலை உருவாக்குதல்

 

பெண் கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான முக்கிய அம்சமாகும். எனவே, பெண் கல்வியை மேம்படுத்துவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷