ஒரு பட்டாம்பூச்சி பத்தே நிமிடங்களில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுத்தரும்..
யாருக்கும் காத்திராமல், யாரையும் காத்திருக்க வைக்காமல், நமது நேரத்தில் நாம் வாழ்வோம்.,
நடையில் வேகம் கூட்ட வேண்டுமா, செய்யலாம்.,
ஒரே இடத்தில ஒன்றரை மணி நேரம் ஆணியத்தாற்போல் ரசித்துக்கொண்டே நிற்க வேண்டுமா, செய்யலாம்.
மலை ஏறலாம். சறுக்கி விழலாம். மரமேறலாம்., ஓடையில் குதிக்கலாம்.
நிறைய பேருடன் பேசலாம். உடன் பயணிகலாம். புதிய விஷயங்களை கற்கலாம்.
புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய விரோதிகளை மறந்தே போவோம்.,
சமயங்களில் யாருக்கோ வலிய சென்று உதவுவோம். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் லிப்ட் தருவார்.
பொக்கை வாய் பாட்டி நம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்!
ஆடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்றுப்போவோம்!
தொட்டாஞ்சினுங்கி இலைகளினூடே தொடாமலே சிணுங்கும் பூவை ரசிக்கலாம்!
கழுதை ஏற்றம் முதல் யானை ஏற்றம் வரை கற்கலாம் (அதிர்ஷ்டமிருந்தால் ஒரு உதை, மிதி வாங்கலாம்).
வண்ணாந்துறையில் கபடி ஆடலாம்.
திட்ட வந்த பெரிய மனிதரை நடுவராக்கலாம். நம் பிஸ்கெட்/சிப்ஸ் பாக்கெட்டுகளை அவர்களின் சோளரொட்டிக்கு பண்டமாற்றம் செய்து கொள்ளலாம்.
மொத்தத்தில், நாம் எப்போதும் தூக்கிச் சுமப்போமே ஒரு மூட்டை, அது இல்லாமல் வெகு இலகுவாய் உணர்வோம்!
தினசரி வாழ்வில் நாம் எத்தனை அர்த்தமில்லா விஷயங்களுக்காக வருந்தி மெனக்கெடுகிறோம் என்று உணரலாம்!
அன்புடன்
K. மாரிக்கண்ணு DHS
விராலிமலை
புதுக்கோட்டை (DT)
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
