வியர்த்தொழுகும் முருகனின் அதிசய கோவில் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips

No photo description available.

திருமணம் நடைபெறும் நாளில் வியர்த்தொழுகும் முருகன் சிலை ! 
 May be an image of temple and text
பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கும். அதில் பல  அபூர்வமான விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கும். 
 
அதேபோல தான் நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் திருக்கோவிலிலும் பல ஆச்சரியமான தகவல் உள்ளது. 
 May be an image of temple
🌟 இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். 
 
பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.
 No photo description available.
🌟 இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. 
 
🌟 சூரனை சம்ஹhரம் செய்த முருகனுக்கு சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அனைத்து சிவாலயங்களிலும் இந்த தெய்வீக திருமணம் நடைபெறும்.
 
🌟 இதேபோல், நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள நவநீதேஸ்வரர் கோவிலும் திருமணம் நடைபெறும். 
 
🌟 இந்த கோவிலில்தான் முருகனின் சிலை வியர்க்கிறது. திருமணம் நடைபெறும் நாளில் முருகன் சிலை வியர்ப்பதை காண முடிகிறது.
 
🌟 சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய் பெருகும் காட்சியை இன்றளவும் காணமுடிகிறது.



 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏