பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்குத் தெரியாது. அதுபோலவே அந்த ஆணின் முதுகைப் பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்தப் பெண்ணுக்கும் தெரியாது.
அந்தப் பெண் யோசிக்கின்றாள்: “ நான் கீழே விழப் போகின்றேன், என்னைப் பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது, இந்த ஆண் நன்றாகத் தானே இருக்கின்றான்.. அவன் தன்னுடைய வலிமையைத் திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று.
ஆனால் அந்த ஆண் யோசிக்கின்றான்: “மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னைத் தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை”
இந்தப் படம் சொல்லும் நீதி: எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை, பிரச்சனைகளைப் பார்க்க முடியாது. அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண,உணர முடியாது.
இது வாழ்க்கை, வேலை, குடும்பம், நண்பர்கள், உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் , ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயல வேண்டும்.
இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக் கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக் கூடியது.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏


