சுய கட்டுப்பாடு ஒழுக்கம்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

சிலந்தி வலைகள் ஒன்று சேர்ந்தால் சிங்கத்தையே கட்டி போடும் என்ற பழைய ஆபிரிக்க பழமொழி உண்டு.
 
நேரம் கிடைக்கும் போது நிச்சயம் கவனித்துப் பார்.
 
சிறுசிறு மெல்லிய கம்பிகள் ஒன்றாக முடுக்கப்பட்டிருக்கும்.
 
தனித்தனியாக எடுத்தால் ஒவ்வொரு கம்பியும் ரொம்ப மெலிதாக வலிமையற்றதாக இருக்கும்.
ஆனால் ஒன்று சேர்ந்தாலோ அதன் மொத்த வலிமை மிக மிக அதிகமாகிவிடும்.
 
சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் இதைப்போலத்தான்.
 
இரும்பை போன்ற மனோ பலம் பெற சிறு சிறு நல்லொழுக்கங்கள் செய்தல் அவசியம்.
திரும்பத் திரும்ப செய்தால் அந்த நற்குணங்கள் ஒன்று சேர்ந்து மிக அதிகமான மனவலிமை உருவாகும். 
 
அதுபோலதான் உன் 
 
மன வலிமையை கட்டவிழ்த்து விட்டால் நீதான் உன் உலகத்தின் தலைவன் ஆகிவிடுகிறாய்.
சுய ஆளுமையை மீண்டும் மீண்டும் பயின்றால் எந்த ஒரு தடையும் உன்னை தடுக்காது.
 
எந்தச் சவாலும் பெரியதாக இருக்காது.
 
எந்த பிரச்சனையும் எளிதில் சரியாகிவிடும்.
 
வாழ்க்கை எதிர்பாராத பிரச்சனைகளை உருவாக்கும் போது அதை எதிர்கொள்ள வேண்டிய மனோ சக்தியை சுயகட்டுப்பாடு உனக்கு தரும். 
 
மன வலிமை இல்லாமல் இருப்பது மனதில் இருக்கும் ஒரு பெரிய குறைபாடு.
 
உயரிய வாழ்க்கை வாழும் அனைவரிடமும் அதிக அளவில் சுய ஒழுக்கமும் மனவலிமையும் இருக்கும்.
 
சொன்னதை சொன்ன நேரத்தில் செய்து முடிக்க மன வலிமையும் சுய ஒழுக்கமும் உதவும்.
 
நமக்கு எதிராக யாராவது வேண்டாததை பேசினால் பதில் சொல்லாமல் விட்டுவிடவும் இந்த சுய கட்டுப்பாடுதான் உதவுகிறது.
 
நமக்கு எதிராக தடைகள் இருப்பதாக நீ நினைத்தாலும் முன்னேறிச் செல்ல இந்த மனோபலம்தான் உதவுகிறது. 
 
மற்றவர்களுக்கும் உனக்கும் நீ செய்த வாக்குறுதிகள் நிறைவேற்ற இந்த சுய ஒழுக்கம் தான் உதவுகிறது.
🙏
✅ தன் பொக்கிஷத்தை விற்ற துறவி

ஆன்மீகச் சிந்தனைகள்